»   »  நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவுற மாதிரி அழுவுறேன்: 2 இயக்குனர்களின் பலே டிராமா?

நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவுற மாதிரி அழுவுறேன்: 2 இயக்குனர்களின் பலே டிராமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனியர் இயக்குனரும், ஜூனியர் இயக்குனரும் மோதிக் கொண்டது விளம்பரத்திற்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தத்தால் படப்பிடிப்புகள் நடக்கவில்லை, புது படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. புது படங்கள் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த பிரச்சனைகளுக்கு இடையே சீனியர் இயக்குனர் ஒருவரும், ஜூனியர் இயக்குனர் ஒருவரும் மோதிக் கொண்டுள்ளனர்.

மோதல்

மோதல்

புதுப்படம் தொடர்பாக இளம் இயக்குனர் ஒருவரும், சீனியர் இயக்குனர் ஒருவரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஜூனியர் சீனியர் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து வருகிறார்.

அமைதி

அமைதி

பெரிய அறிக்கை விட்ட சீனியர் அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் பொய் என்கிறார் ஜூனியர் இயக்குனர். இவர்களின் மோதல் தான் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

சீனியர் இயக்குனர் செய்த சில காரியங்களை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறிய ஜூனியர் அதை வெளியிடவில்லை. சீனியரோ அறிக்கை விட்டதோடு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

விளம்பரம்

விளம்பரம்

சினிமா ஸ்டிரைக் நடப்பதால் இசை வெளியீட்டு விழாவோ, விளம்பர நிகழ்ச்சிகளோ, பிரஸ் மீட்டோ வைத்து படத்திற்கு விளம்பரம் தேட முடியாது. இதனால் சீனியரும், ஜூனியரும் சேர்ந்து மோதிக் கொள்வது போன்று மோதி விளம்பரம் தேடுகிறார்களோ என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

வித்தியாசம்

வித்தியாசம்

வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டி தேடுவது வழக்கமாகிவிட்டது. புது படங்களை திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்பவர்களுக்கு கோரிக்கை வைத்து விளம்பரம் தேடிய சம்பவங்கள் எல்லாம் நடந்த நிலையில் இந்த இயக்குனர்கள் மோதியுள்ளது பப்ளிசிட்டிக்கு தான் என்று கூறப்படுகிறது.

English summary
People suspect publicity stunt behind the recent clash between a senior director and a junior director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X