Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
இப்படி ஒப்பாரி வைக்க அதுதான் காரணமா? பாடகரை அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டார்களா?
சென்னை: தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஓரங்கட்டி விட்டார்கள் என்றும் சமீபத்தில் புதிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் அந்த பிரபல பாடகர்.
எத்தனையோ உதவி இயக்குநர்களின் கதையை அப்படியே ஆட்டையைப் போட்டு முன்னணி இயக்குநர்களாக வேஷம் போட்டு திரிபவர்களுக்கு எதிராக உதவி இயக்குநர்கள் கூட இப்படி பொங்கி எழாத நிலையில், பாடகர் இப்படி பொசுக்கென பொங்கி இருப்பதற்கு பின்னணியில் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவாம்.
எல்லாவற்றுக்கும் முக்கியமாக முதலுக்கே மோசம் ஆனது தான் இந்த குமுறலின் வெளிப்பாடு என்கின்றனர்.
சூர்யாவின்
'ஜெய்பீம்’,
டொவினோ
தாமஸின்
'மின்னல்
முரளி’:
யார்
சம்பம்
செய்றாங்கன்னு
பார்ப்போம்?

ஏமாற்றாதே ஏமாறாதே
சினிமாவில் இந்த வேத மந்திரம் தான் மிகவும் முக்கியமானது. யாரையும் ஏமாற்றவில்லை என்றால் கூட ஏமாந்து போய் விடக் கூடாது. ஆனால், ஏமாற்றுவதும் ஏமாறுவதுமே இங்கே வாடிக்கையான ஒன்றாக மாறி ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் அடித்தளம் அமைத்து வருகின்றன. அந்த பாடகர் கதையும் தற்போது அப்படித்தான் ஆடிப் போய் கிடக்கிறது.

திருடியதாக புகார்
தனது ஒட்டுமொத்த உழைப்பையும் திருடிவிட்டனர் என பகிரங்கமாக பேசி உள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் இறங்கிய நிலையிலும், அவர் சமாதானம் அடைவதாகவே தெரியவில்லை. அவருக்கு பின்னாடி இருந்து யாரோ அந்த இசையமைப்பாளருக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

இதற்காகத்தான் ஒப்பாரியா
அந்த திறமையான பாடகருக்கு கருத்து ரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதால், பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அவருக்கு பாட வாய்ப்புகளையே கொடுக்க முன் வருவதில்லை. வந்த ஒருவரும் தற்போது மூக்கை உடைத்து அனுப்பி இருக்கும் நிலையில், முதலுக்கே மோசம் வந்து விட்டதை எண்ணியே இப்படி ஒப்பாரி வைத்து வருகிறார் அந்த பாடகர் என கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

ஹீரோ இசையமைப்பாளர்
ஹீரோ இசையமைப்பாளர் மட்டுமே துவண்டு போய் கிடக்கும் அந்த பாடகருக்கு தனது படங்களில் பாட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். ஆனால், மற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அந்த இசையமைப்பாளருடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் தெரிந்ததில் இருந்தே ஒட்டுமொத்தமாக ஒதுக்கியதன் வெளிப்பாடு தான் இந்த உண்மையான கோபம் என்கின்றனர்.

கடந்து போயிருப்பார்
படு பிசியாக பல படங்கள் கைவசம் இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, இதற்கு மேல் பேரிய சாதனையை செய்து காட்டுகிறேன் என சாதித்து ஏமாற்றியவர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பார். ஆனால், ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்யும் வேலை நடப்பதை ஜீரணிக்க முடியாமல் தான் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார் அந்த அப்பாவி பாடகர் என்கின்றனர்.