»   »  அம்மா ஆகமாட்டேன் அக்ரிமெண்ட் தான் டைவர்ஸுக்கு காரணமா?

அம்மா ஆகமாட்டேன் அக்ரிமெண்ட் தான் டைவர்ஸுக்கு காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டு வாரங்களாக அந்த விவாகரத்து தம்பதி தான் தலைப்பு செய்தியாகி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டை போட்டு ஊரைக் கூட்டாமல் சமரசமாகவே பிரிய முடிவு எடுத்துவிட்டார்கள். இருவருக்கும் பொதுவான சில நண்பர்கள் மீண்டும் இணைக்க இன்னமும் முயற்சி செய்து வந்தார்கள். ஆனாலும் இயக்குநர் நேற்று விட்ட 'நேர்மை - நம்பிக்கை' அறிக்கை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

இருந்தாலும் இந்த பிரிவுக்கு இப்போது ஒரு புது காரணம் சொல்கிறார்கள்.

Is this the reason behind the divorce?

நடிகை நடிக்க வந்தது பற்றி இயக்குனருக்கு எந்த கோபமும் இல்லையாம். அம்மா கேரக்டரில் நடித்த படம் போல நடித்துவிட்டு போகட்டும் என்று இருந்த கணவருக்கு நார்த் மெட்ராஸ் படத்தில் நடிப்பது தெரிய வந்ததுதான் பிரச்னையே... அந்த படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட இருக்கிறது. எனவே இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கேட்டார்களாம். இதனால்தான் சமர்த்து நடிகையே விலகினார். ஹீரோ ரெகமெண்டேஷனுடன் உள்ளே வந்த நடிகையிடம் படம் முடியும்வரை கர்ப்பமாகக் கூட என்பதை எழுதி வாங்கிவிட்டார்களாம். கடைசியில்தான் இயக்குநருக்கே இது தெரியுமாம்.

இதனால் வந்த கோபம்தான் இந்த பிரிவு என்கிறார்கள்.

English summary
Sources say that the reason behind the separation between the director and actress couple is North Madras movie agreement.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil