தகவல் சொல்லாமல் இப்படி அறிவிச்சுட்டாரே.. கடுப்பான ஹீரோ.. அந்த அப்செட் பதிவுக்கு இதுதான் காரணமாமே!

By

சென்னை: பிரபல ஹீரோவின் அந்த அப்செட் பதிவுக்கு தயாரிப்பாளரின் அந்த முடிவுதான் காரணம் என்கிறார்கள்.

குத்துச்சண்டை தொடர்பான படத்தில் நடித்து வருகிறார், அந்த பிரபல ஹீரோ. கடைசி ரவுண்ட் படத்தில் நடித்தவர், ஹீரோயின்.

நிஜமாகவே குத்துச்சண்டை வீராங்கனையான அவரை ஹீரோயினாக்கி இருப்பதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

சிறப்புப் பயிற்சி

சிறப்புப் பயிற்சி

வழக்கமாக படங்களில் சிறப்பாக நடிப்பதற்காக மெனக்கெடும் அந்த ஹீரோ, இந்தப் படத்துக்காக இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார். வெளிநாட்டில் போய் சிறப்பு பயிற்சி பெற்று வந்திருக்கிறார். ஏற்றி இறக்கி என கொஞ்சம் ஒவராகவே உடலை வருத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தபோது ரசிகர்கள் தாறுமாறாக

லாக்டவுன்

லாக்டவுன்

அதில் அந்த ஹீரோவும் ஹீரோயினும் ரசிக்கும்படி இருந்தனர். கேரக்டருக்கு நியாயம் சேர்ப்பதாக இருந்தது இருவர் லுக்கும். இந்தப் படத்துக்கு வில்லனாக முதலில் பேசியது, அந்த பாலிவுட் இயக்குனர் கம் நடிகரை. அவர் தமிழில் ஏற்கனவே ஒரு படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் நடித்தால் கதைக்குப் பொருத்தமாக என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் லாக்டவுன், ஷூட்டிங்கை நிறுத்திவிட்டது.

வலுவாக்கி வருகிறார்

வலுவாக்கி வருகிறார்

லாக்டவுன் முடிந்து ஷூட்டிங் தொடங்குவதை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஹீரோ, இந்தப் படத்துக்காக எப்போதும் ஜிம்மே கதி என்று இருக்கிறார். உடலை மேலும் வலுவாக்கி வருகிறார். இதற்கிடையேதான் அந்த திடீர் அறிவிப்பு தகவல், ஹீரோ காதுக்குச் சென்றிருக்கிறது. நொந்துபோன ஹீரோ, அதற்கு பிறகுதான் சமூக வலைத்தளப் பக்கத்தில், அந்தப் படம் பற்றி பூடகமாக கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

அதை கண்டவர்கள் படத்துக்கு ஏதோ சிக்கல் என்று புரிந்துகொள்ள கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது வில்லனாக நடிக்க இருந்த இந்தி நடிகரை விட்டுவிட்டு, அந்த தயாரிப்பாளரே வில்லனாகி விட்டதுதான் ஹீரோவின் டென்ஷனுக்கு காரணம் என்கிறார்கள். அவர் வில்லனானது பிரச்னையில்லை, அதை ஹீரோவுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வில்லையாம். அதுதான் டென்ஷனுக்கு காரணம் என்கிறார்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X