எல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: ரொம்ப டீசன்ட்டா அட்வைஸ் சொன்ன ரசிகரை அந்த மங்களகரமான நடிகை விளாசியதும் அந்த நிகழ்ச்சியின் பரபரப்புக்குத் தானாம்.
இதுவரை எங்கிருந்தார் என்றே தெரியாமல் ஆள் அட்ரஸே இல்லாமல், இருந்த அந்த நடிகைப் பற்றி திடீரென பரபரப்பு பேச்சுக்கள் கிளம்ப அது தான் காரணமாம்.
இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் யுக்தியை அந்த நிகழ்ச்சி ரொம்ப காலமாகவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீரியல் நடிகைகள் சண்டை
அதே நிகழ்ச்சியின் புரொமோஷனுக்காகத் தான் சமீபத்தில் அந்த சீரியல் நடிகைகள் இருவரும் வேண்டுமென்றே சண்டை போட்டுக் கொண்டதும். ஆக்சுவலா இருவரும் நல்ல தோழிகளாம். நிகழ்ச்சிக்கு அதில் ஒருத்தர் வர உள்ளதால் அப்படியொரு பரபரப்பை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தனர்.

ரசிகரின் அட்வைஸ்
அதே போல ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்டை தான் தற்போது மார்க்கெட் இழந்து தவிக்கும் அந்த மங்களகரமான நடிகையும் கையாண்டு இருக்கிறார். சும்மா ஒரு போட்டோ போட்டாலே ஏகப்பட்ட ரசிகர்கள் கழுவி ஊற்றி வரும் இந்த நேரத்தில், ரசிகர் ஒருவர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையில் செட்டிலாகலாமே என்ற அட்வைஸை வைத்து அட்ராசிட்டி பண்ணி உள்ளார்.

இவரோட செட்டப் தானாம்
அந்த ரசிகரின் டிசன்ட்டான கமெண்ட்டும் அந்த நடிகையின் செட்டப் தான் என்கின்றனர் நெட்டிசன்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை சந்திக்க உள்ளதால், தனது பக்கமும் கொஞ்சம் மீடியா வெளிச்சமும் ரசிகர்கள் பார்வையும் படுவதற்கு அந்தம்மா போட்ட அப்படியொரு பிளான் தான் இது என்கின்றனர்.

இன்னொரு ரவுண்டு
விட்டுப் போன இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் உடல் எடை எல்லாம் குறைத்து செம ஸ்லிம் ஆகி உள்ளார் அந்த நடிகை. மறுபடியும் சினிமாவில் பழையபடி ஒரு ரவுண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற வேண்டும் என்ற முடிவுடனும் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

சான்ஸ் கிடைக்குமா
அந்த பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஹீரோயின்களுக்கே இன்னமும் புதிய வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில், இவருடைய கணக்கு மட்டும் சரியா வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் இவருக்கு செம டஃப் கொடுக்க ஏகப்பட்ட கவர்ச்சி நடிகைகள் களமிறங்க உள்ளதால், இவர் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்பார் என்பதே கேள்விக் குறி தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











