அதே ஸ்டைல், அதே லுக், அதே கத்தல்.. ஆசையாக தொடங்க இருந்த ஆயுதப் படம்.. டிராப் ஆனது இதற்காகத்தானாம்!

By

சென்னை: ஆயுதம் ஒன்றின் பெயரில் தொடங்க இருந்த படம், திடீரென நின்று போனதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

அந்த சூரிய நடிகர், இப்போது விமானம் தொடர்பான படத்தில் நடித்திருக்கிறார். எக்கச்சக்கமாக செலவழித்து உருவாகியுள்ள இந்தப் படத்தை அதிகமாக நம்புகிறார் ஹீரோ.

ஏனென்றால் கடந்த சில வருடங்களாக அந்த ஹீரோ நடித்த படங்கள் எதுவும் வெற்றியை பெறவில்லை.

தியேட்டர் அதிபர்கள்

தியேட்டர் அதிபர்கள்

அதனால் இந்தப் படத்தின் கதையில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறார்களாம். ரிலீஸ் நேரத்தில் கொரோனா தொற்று பரவியதால், மற்றப் படங்களைப் போலவே இந்தப் படமும் பாதுகாப்பாக டிஸ்குக்குள் இருக்கிறது. இதற்கிடையே, அந்த ஹீரோவின் குடும்பம் தயாரித்த படம், ஓடிடி-யில் வெளியானதால் தியேட்டர் அதிபர்கள் பஞ்சாயத்து வேறு இருக்கிறது தனியாக.

சம்மதம் சொன்னார்

சம்மதம் சொன்னார்

இந்தப் படத்துக்குப் பிறகு ஆயுதம் ஒன்றின் பெயர் கொண்ட படத்தில் நடிக்க இருந்தார் ஹீரோ. அந்த இயக்குனரும் அவரும் இதற்கு முன் இணைந்த படங்கள் வரவேற்பை பெற்றிருப்பதால், உடனே சம்மதம் சொல்லியிருந்தார். அதற்கான முன் தயாரிப்பு பணிகள் பரபரப்பாகத் தொடங்கி இருந்தன. ஹீரோயின்களில் இருந்து டெக்னீஷியன்கள் வரை அனைவரையும் முடிவு செய்திருந்தனர்.

எப்போது ஷூட்டிங்

எப்போது ஷூட்டிங்

இந்த நேரத்தில் கொரோனா பாய்ந்து வந்து பலரின் வாழ்க்கையோடு விளையாடி கொண்டிருக்கிறது. சினிமா நடிகர், நடிகைகள் கால்ஷீட் பார்த்து வாழ்பவர்கள். அவர்களுக்கு நேரம் முக்கியம். ஒவ்வொரு மணி நேரமும் பணம். அந்த நேரத்தை அசால்டாக முடக்கிப் போட்டு முதுகில் ஏறி அமர்ந்திருக்கிறது, கொரோனா. எப்போது இது முடிந்து, ஷூட்டிங் தொடங்குவது என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அசுர இயக்குனர்

அசுர இயக்குனர்

இதற்கிடையே, கொரோனா மரணங்கள் அந்த எண்ணத்தைத் தள்ளியும் வைத்திருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது சினிமா இன்டஸ்ட்ரியில். அது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த ஹீரோ, லாக்டவுன் முடிந்ததும் அசுர இயக்குனர் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வித்தியாச கதைகள்

வித்தியாச கதைகள்

இப்போது நடித்திருக்கும் விமான படமும் அசுர இயக்குனருடன் நடிக்கப் போகும் வாசல் படமும் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை கொண்டதாம். மேக்கிங்கும் வழக்கமாக இருக்காதாம். இந்த நேரத்தில் அந்த ஆயுத படத்தில் நடித்தால், பழைய ஸ்டைலாக இருக்கும் என்றும் நினைத்தாராம் ஹீரோ. அதாவது ஒரே ஸ்டைல், கோபக்கார லுக், கத்தல், ஆயுதங்கள், டாட்டா சுமோ, ஏகப்பட்ட ஹெலிகேம் ஷாட் என பார்த்ததாகவே இருக்கும் என யோசித்தாராம்.

மனைவியின் தம்பி

மனைவியின் தம்பி

அதனால்தான், அதில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தாராம் ஹீரோ. லாக்டவுன் இல்லை என்றால் இதற்குள் ஷூட்டிங் தொடங்கி இருக்கும். ஆனால், லாக்டவுன்தான் ஹீரோவை யோசிக்க வைத்ததாம். இதையடுத்து அந்த ஹீரோ, தனது மனைவியின் தம்பியை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். பல வருடங்களாக அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டுக்கொண்டிருந்தாராம் மனைவியின் தம்பி. காலம் இப்போது இணைத்திருக்கிறது இருவரையும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X