இந்த லாக்டவுனில் ஏன் இவ்வளவு அவசரம்..? அந்தப் படம் பற்றிய திடீர் அறிவிப்பு, இதற்காகத்தானாமே!

By

சென்னை: இந்த லாக்டவுனில் அந்தப் படம் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்டது இதற்காகத்தான் என்கிறார்கள், கோலிவுட்டில்.

கொரோனா தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது, சினிமாவை. பல டாப் ஹீரோ படங்களின் ரிலீஸ் வெயிட்டிங்.

சில ஹீரோ படங்களின் ஷூட்டிங் பாக்கி. போட்ட முதல் கிடைக்குமா என தவிக்கும் தயாரிப்பு என்று மொத்தமாக தவித்து வருகிறது சினிமா இன்டஸ்டரி.

நாளுக்கு நாள்

நாளுக்கு நாள்

இதற்கிடையே தியேட்டர்களை திறப்பதற்கான அனுமதி இப்போதைக்கு கிடைக்காது என்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தொழில்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சில மாநிலங்களில், சினிமா படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அனுமதி கொடுத்தாலும் தியேட்டர்களை திறப்பதற்கு இப்போது அனுமதி கிடைக்காது என்கிறார்கள்.

வருவார்களா

வருவார்களா

அப்படியே தியேட்டர்களுக்கு அனுமதி கொடுத்தாலும் பொதுமக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது சந்தேகமே. ஆனால், லாக்டவுனுக்குப் பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அந்த டாப் ஹீரோ படத்தை முதல் படமாக ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்பது, தியேட்டர்காரர்கள் நம்பிக்கை.

திருப்பித் தருகிறேன்

திருப்பித் தருகிறேன்

ஆனால், இதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். இதற்கிடையே, அந்த டாப் ஹீரோ படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த வினியோகஸ்தர்கள், பணத்தைத் திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அதற்கு, படம் ஓடவில்லை என்றால் வட்டியுடன் உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம், படத்தை மொத்தமாக வாங்கியுள்ள அந்த தயாரிப்பு.

நம்பிக்கை

நம்பிக்கை

இருந்தாலும் வினியோகஸ்தர்கள் சமாதானம் அடையவில்லை என்கிறார்கள். அவர்கள் மீண்டும் பணத்தைக் கேட்க, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தத்தான், அந்த ஹீரோ தன் மகனுடன் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பை இந்த லாக்டவுன் நேரத்திலும் அவசரம் அவசரமாக வெளியிட்டிருக்கிறார்களாம். ஏற்கனவே அந்த ஹீரோ, பாம்பு பெயரை கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று படத்தில்

வரலாற்று படத்தில்

அதை முடித்ததும், அந்த கிளாஸ் இயக்குனரின் வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும். அதையெல்லாம் எப்போது முடித்து இந்த கேங்ஸ்டர் படத்தில் அவர் நடிப்பது? என்று கேட்கிறார்கள் கோலிவுட்டில்! ஏற்கனவே கையில் இரண்டு படங்களை வைத்திருக்கிற அந்த தயாரிப்பு, இதை எப்போது தொடங்குவார் என்றும் கேட்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X