எல்லாரும் எதிர்பார்த்த படம்.. இதற்காகத்தான் டாப் ஹீரோ, அதில் இருந்து விலகினாராமே.. உண்மையா?

By

சென்னை: அந்தப் படத்தில், டாப் ஹீரோ நடிக்க மறுத்து விட்டதாகவும் அதற்கான காரணம் இதுதான் என்றும் சொல்கிறார்கள், கோடம்பாக்கத்தில்.

அந்த சிவமயமான இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார் டாப் ஹீரோ. லாக்டவுனுக்குப் பிறகு இதன் பாக்கி ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இதையடுத்து அவர் வேர்ல்ட் நாயகன் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதுபற்றிய தகவல்கள் பரபரப்பாக வந்தன.

தகவல் வராது

தகவல் வராது

ஆனால், வந்த வேகத்திலேயே அந்த செய்திகள் அடங்கிவிட்டன. லாக்டவுன் காரணமாகத் தான் அந்த தகவல் அடங்கி விட்டதாகவும் அதற்கு பிறகு அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கோலிவுட்டில் முதலில் கூறப்பட்டது. ஆனால், லாக்டவுனுக்குப் பிறகும் அந்தப் படம் பற்றிய தகவல் வராது என்கிறார்கள்.

வேற லெவல்

வேற லெவல்

உலக நாயகன் தயாரிப்பில், டாப் ஹீரோ நடித்தால் அந்தப் படத்துக்கு வேற லெவல் வரவேற்பு கிடைக்கும் என்றுதான் முதலில் நினைத்தார்கள். அந்த மாஸ்டர் இயக்குனர் சொன்ன கதையும் அப்படித்தான் இருந்ததாம். ஆரம்பத்தில், பேசலாம் என்று சொன்ன டாப் ஹீரோ, அரசியலில் இறங்க திட்டம் வைத்துள்ள இந்த நேரத்தில் அந்தப் படம் சரியாக வருமா? என்று யோசித்தாராம்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

பிறகு அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தது வேர்ல்ட் நாயகனாம்! இப்படிச் சென்று கொண்டிருந்த நிலையில்தான் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் மாற்றி வைத்திருக்கிறது கொரோனா லாக்டவுன். இந்தப் பிரச்னைகள் முடிந்து படப்பிடிப்புகள் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும். அப்படியே தொடங்கினாலும் தற்போது நடித்து வரும் படத்துக்கே இந்த வருடம் முழுவதும் ஆகிவிடும்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

அடுத்து புதிய படத்தைத் தொடங்கினால், அந்த படம் முடிய எவ்வளவு காலம் ஆகுமோ? தெரியாது. அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றால், அதற்கு முன்பே அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும். இதனால், அந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று டாப் ஹீரோ மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள், கோலிவுட்டில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X