அந்த டாப் ஹீரோயின் காதல் டக்கென முறிந்ததற்கு இதுதான் காரணமாமே.. லேட்டாக பரவும் லேட்டஸ்ட் தகவல்!

By

சென்னை: அந்த டாப் ஹீரோயினின் முன்னாள் காதல் முறிந்து போனதற்கான, நிஜ காரணம் இதுதான் என்கிறார்கள் கோலிவுட்டில்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கிறார் அந்த ஹீரோயின். அவர் மீது அவ்வளவு மரியாதை.

சீனியர் நடிகையாகிவிட்டாலும் தமிழ், தெலுங்கில் இன்னும் கூடிக்கொண்டிருக்கிறது மவுசு.

பர்சனல் வாழ்க்கை

பர்சனல் வாழ்க்கை

அவருடைய பர்சனல் வாழ்க்கை காதல்களால் மூழ்கி இருந்தாலும் நடிப்பு வாழ்க்கை பிரமாண்டமாக இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் நியூஸ் ஆவது, ஒருவகையில் அவருக்கு யோகம்தான்! அவர் நடித்த படங்கள், சில வருடங்கள் முன்பு தொடர்ந்து ஹிட்டானதால், நடிகையிடம் திடீர் மாற்றம்.

நடிகைகளில் முன்னணி

நடிகைகளில் முன்னணி

சம்பளத்தை கோடிகளுக்கு உயர்த்தினார். ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்தனர். அவர் நடிக்கும் படங்களுக்கு ஹீரோக்களை போல பிசினஸும் இருப்பதால், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார் அவர்.

பெரும் உழைப்பு

பெரும் உழைப்பு

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் இந்த இடத்தை அடைவதற்கு பின்னால் அவருடைய பெரும் உழைப்பு இருக்கிறது. இது இருக்கட்டும். இந்த ஹீரோயின் அந்த இயக்குனரும் நடிகருமான பிரபலத்தை காதலித்து வந்தார், சில வருடங்களுக்கு முன், பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த காதலர்களை அவ்வளவு பொருத்தமான ஜோடி என்றும் கூறி வந்தனர்.

முறிந்து விட்டது

முறிந்து விட்டது

திருமணம் வரை சென்ற இவர்கள் காதல், திடீரென ஒரு நாள் முறிந்துவிட்டது. இதற்கான காரணமாக, கருத்துவேறுபாடு என்று அப்போது கூறப்பட்டது. அதை, நம்பிக்கையை மீறுவது என்று கூறியிருந்தார், அப்போது அளித்த பேட்டி ஒன்றில் நடிகை.

லேட்டாக செய்தி

லேட்டாக செய்தி

இந்நிலையில் இருவரும் பிரிந்ததற்கான காரணம் இதுதான் என்று லேட்டாக ஒரு செய்தி லேட்டஸ்டாக ஓடிக்கொண்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். அதாவது, அந்த ஹீரோயினும் ஹீரோவும் மும்பையில் தங்கி இருந்தனர், ஒரு நட்சத்திர ஓட்டலில். அப்போது அங்கு ஷூட்டிங்கில் இருந்தார், ஹீரோ.

போனவர் போனவர்தான்

போனவர் போனவர்தான்

பிறகு திடீரென்று ஒரு நாள், அந்த ஹீரோ ஓட்டலை விட்டு மாயமாகிவிட்டார். போனவர் போனவர்தான். மூன்று நாட்களாக வரவே இல்லையாம். ஃபோனையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நொந்துபோன, ஹீரோயின் ஓட்டல் ரூமை காலி செய்துவிட்டு, நேராக சென்னைக்கு பிளைட் பிடித்தாராம்.

சொல்லி கதறினார்

சொல்லி கதறினார்

இங்கு வந்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர்விட்டு இதைச் சொல்லி கதறினாராம் நடிகை. இதற்குப் பிறகுதான் அவர், அந்த ஹீரோவை பிரிந்தார் என்று சொல்கிறார்கள். அந்த ஹீரோ இப்போது திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த தகவலும் வேகமாகப் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X