அங்கிருந்து வந்த வார்னிங்.. சைக்கோ இயக்குநருக்கு டாட்டா காட்டிய இளம் மாஸ் ஹீரோ.. என்ன நடந்தது?

By Staff

சென்னை: சைக்கோ கதையை படமாக்கி பாராட்டுக்களை அள்ளிய இயக்குநருக்கு இப்படியொரு நிலைமையா? என கோடம்பாக்கமே ஒரே பேச்சாக அவரை பற்றித் தான் பேசி வருகிறது.

பல முன்னணி நடிகர்கள் நடிக்க மறுத்த கதையை படமாக்கி ஹிட் கொடுத்த நிலையில், அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார் அந்த இயக்குநர்.

அடுத்த படம் உங்க கூடத்தான் என சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் ஒல்லி நடிகர் கை விரிக்க இளம் மாஸ் ஹீரோவும் இப்படி டாட்டா காட்டி விட்டாரே என இயக்குநரை பார்ப்பவர்கள் எல்லாம் துக்கம் விசாரித்து வருவது போல ஆறுதல் சொல்லி வருகிறார்களாம்.

அடுத்தடுத்து ஹிட்

அடுத்தடுத்து ஹிட்

தான் இயக்கிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடிக்க இனிமே வேற லெவலில் எதிர்காலம் மாறப் போகிறது என காலரை தூக்கிவிட்டு கொண்டிருந்த அந்த இயக்குநரின் மொத்த கனவும் ஒல்லி நடிகர் சொன்ன அந்த ஒரு வார்த்தை அப்படியே மாற்றி போட்டு விட்டது.

இந்தியளவில்

இந்தியளவில்

இந்தியளவில் ரசிகர்களை மிரள வைத்த அந்த சைக்கோ படத்தை இயக்கி மிரட்டிய இயக்குநருக்கு பாராட்டுக்கள் பல இடங்களில் இருந்தும் குவிந்தன. அடுத்து எனக்குத் தான் படம் பண்ணனும், எனக்காக ஒரு கதையை தயார் பண்ணுங்க என பல ஹீரோக்கள் கர்ச்சிப் போட ஆரம்பித்தனர்.

ஒல்லி நடிகர்

ஒல்லி நடிகர்

ஆனால், ஒல்லி நடிகர் ஓகே சொல்லி விட்டாரே என அவருக்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்துக் கொண்டு கால்ஷீட் கேட்க போக இதே போல பல இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு காக்க வைத்திருக்கும் ஒல்லி நடிகர் கதையில் அது சரியில்லை. இது சரியில்லை மாற்றுங்கள் என காலங் கடத்த ஆரம்பித்தார்.

கார்ட்டூன் படம்

கார்ட்டூன் படம்

கடைசியில் ஒரு மாதிரி கதையை ரெடி பண்ணி விட்டு நடிகரிடம் போய் நீட்ட கதையை படித்து விட்டு இது ஒரு கார்ட்டூன் படத்தின் கதை மாதிரி இருக்கே என சொல்லி அவருக்கு தருவதாக சொன்ன வாய்ப்பை மறுத்து விட்டாராம் அந்த ஒல்லி நடிகர்.

இளம் மாஸ் ஹீரோவிடம்

இளம் மாஸ் ஹீரோவிடம்

இந்த கதையை ரெடி பண்ணவே பல ஆண்டுகள் தேவையில்லாமல் ஓடி விட்டன. இன்னொரு புதிய கதையை தயார் செய்ய போனால் இன்னும் சில ஆண்டுகள் வீணாகிவிடும் என நினைத்த அந்த இயக்குநர் அப்படியே கதையை இளம் மாஸ் ஹீரோவிடம் கொண்டு கொடுத்து இருக்கிறார். அவரும் கதையை படித்து விட்டு சூப்பரா இருக்கு உடனே பண்ணலாம் என சொல்லி விட்டாராம். எப்படியோ இந்த முறை மிஸ் ஆகாது என சந்தோஷப்பட்ட இயக்குநருக்கு அங்கேயும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டாட்டா காட்டிய ஹீரோ

டாட்டா காட்டிய ஹீரோ

இவரிடமும் ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ள நிலையில், கதை சொன்ன அந்த இயக்குநருக்கான சரியான கால்ஷீட் குறித்து எந்தவித பேச்சுவார்த்தைகளை சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிறார். இதனால், கடுப்பான இயக்குநர் ஏதாவது கன்ஃபார்ம் பண்ணி சொல்லுங்க நான் வேலையை ஆரம்பிக்கிறேன் என ஓப்பனாக கேட்க இப்போதைக்கு முடியாது என டாட்டா காட்டி விட்டாராம்.

அங்கிருந்து வந்த வார்னிங்

அங்கிருந்து வந்த வார்னிங்

இளம் மாஸ் ஹீரோ இப்படி சொல்ல காரணமே அந்த இசையமைப்பாளர் தானாம். ஒல்லி நடிகருடனும் இளம் மாஸ் ஹீரோவுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அவர் கொடுத்த வார்னிங் காரணமாகவே இந்த படத்தில் கமீட் ஆவதை தள்ளிப் போட்டு வந்திருக்கிறார் அந்த இளம் ஹீரோ என தகவல்கள் கசிந்துள்ளன.

மீண்டும் அதே ஹீரோவுடன்

மீண்டும் அதே ஹீரோவுடன்

இரண்டு ஹீரோக்களும் இப்படி மாறி மாறி பந்தாடிய நிலையில், வெறுத்துப் போன அந்த இயக்குநர் ஏற்கனவே நம்மை நம்பி நடிக்க ஒப்புக் கொண்ட அதே நடிகருடன் மீண்டும் இணைந்து பார்ட் 2 படத்தை இயக்கலாம். பின்னர், அந்த கதையை யாருடைய தலையிலாவது கட்டலாம் என்கிற நிலைக்கு வந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கிறாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X