»   »  கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க

கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக்கப் டிராப் நடிகருக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்று வெளியான தகவலை பார்த்து தான் மக்கள் இப்படி பேசிக் கொள்கிறார்கள்.

ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார் பிக்கப் டிராப் நடிகர். அவரின் பிக்கப் டிராப் லீலைகள் பற்றி தெரிந்து அவருக்கு யாரும் பெண் தர மாட்டேன் என்கிறார்களாம்.

இந்நிலையில் அவருக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்து வருகிறது.

பேபி

பேபி

நடிகரும் போட்டியாளர்களிடம் நெருங்கிப் பழகி வருகிறார். போட்டியாளர்கள் நடிகருக்கு முத்தம் கொடுக்க அவர் பதிலுக்கு முத்தம் கொடுக்க என்று வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது.

விபரம்

விபரம்

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக்கப் டிராப் நடிகருக்கு ரூ. 8 முதல் 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையா?

உண்மையா?

நடிகரின் சம்பள விபரம் குறித்து கேள்விப்பட்டவர்கள் கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க என்கிறார்கள். பெரிதாக மார்க்கெட் இல்லாத அவருக்கு இவ்வளவு சம்பளமா, இருக்காது என்கிறார்கள்.

காரணம்

காரணம்

பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தமிழில் துவங்கப்பட்ட உடன் நடிகரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறது. தமிழில் பெரிய அளவில் வர வேண்டும் என்பதற்காக அவருக்கு பெரிய தொகையை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Buzz is that Pickup drop actor is paid Rs. 8 - 10 crore to participate in a Television programme. Actor is doing well in that programme as he will reportedly end up marrying the winner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X