இதுதான் அந்தப் படத்துக் கதைன்னு கோலிவுட்ல அரசல் புரசலா சொல்றாங்களே... நெசமாவா?
சென்னை: விரைவில் வெளியாக இருக்கிறது டாப் நடிகரின் அந்தப் படம். ஆகாயம் வரை அசரடிக்கிறது படத்துக்கான பப்ளிசிட்டி.
டாப் ஹீரோவுடன் மோதுகிறார் இந்தி வில்லன். ஸ்டைலாக அந்த ஹீரோ வரும் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன, சமூக வலைத்தளங்களில்.
நடிகர் அடுத்த பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு. இதற்கிடையில் வழக்கு வேறு.

படத்தின் கதை
இது இப்படி சென்றுகொண்டிருக்க, இதுதான் அந்தப் படத்தின் கதை என்று சாலிகிராம சந்துபொந்துகளில் தலை தெறிக்கப் பறக்கிறது, ஒரு ஆரவார ஸ்டோரி. அது உண்மையா, பொய்யா என்பது படம் வந்தால்தான் தெரியும். அந்தக் கதை இதுதான்.

நேர்மையான அதிகாரி
அந்த அதிகாரிக்கு ஒரு மகள். நேர்மையான அவர், கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலைமை. சரியென்று முடிவு செய்யும் போது அவருக்குக் கிடைக்கிறது, தன் மகளின் வீடியோ ஒன்று.

ஆவேசமாகும்...
அதில், ஒரு கலவரத்தில் வந்த ஆளைக் குறிப்பிட்டு அவர் தன்னைக் கொன்றதாக சொல்கிறார் மகள். ஆவேசங்கொள்ளும் அதிகாரி, கட்டாய ஓய்வை கைவிட்டுவிட்டு, அவர்களை எப்படி துவைத்து எடுக்கிறார் என்பதுதான் அதிரடி கதையாம்.

எந்தளவு உண்மை
இதுதான் அந்தப் படத்தின் கதை என்று அடித்துச் சொல்கிறார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கதையாகக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இயக்குனர் திரைக்கதையில் மிரட்டியிருப்பாரே என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











