வேர்ல்ட் ஹீரோவுக்கும் தயாரிப்புக்கும் மீண்டும் பிரச்னையாமே... எங்க போய் முடியப்போகுதோ தெரியலையே?
சென்னை: அந்த இரண்டாம் பாகப் படத்தில் நடித்து வருகிறார், வேர்ல்ட் ஹீரோ. முதல் பாகம் ஏற்கனவே ஹிட்டடித்திருப்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது அந்தப் படத்தின் மீது.
முதல் பாகத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனரே, இதையும் இயக்கி வருகிறார். இரண்டு இளம் ஹீரோயின்கள், ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்தது. லண்டன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது, பணத்தை தண்ணியாகச் செலவழித்து.

திடீர் மோதல்
இப்போது ஹீரோவுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் திடீர் மோதல் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு.
இதுக்கான காரணம் பற்றி ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்கள்.

பணப்பிரச்சனை?
ஹீரோ இன்னும் கொஞ்சம் பணம் கேட்டதாகவும் ஏற்கனவே அதிகமாகக் கொடுத்துவிட்டோம் என்று அவர்கள் தரப்பில் சொன்னதாகவும் தகவல்.

காமெடி படம்
ஏற்கனவே இந்த ஹீரோ, அந்த நிறுவனத்தின் தயாரிப்பில், சாதிபெயரை பின்பாதியில் கொண்ட காமெடி படத்தை எடுத்தார். அமெரிக்காவில் போய் ஷூட் பண்ணிவிட்டு வந்தார்கள் படத்தை.

பெட்டிக்குள்
ஆனால், அந்தப் படம் அப்படியே பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு ஹீரோ மேலும் பணம் கேட்டதால் பிரச்னை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











