எனக்கு நீதான் வேண்டும்.. 20 கோடி ரூபாயை கொட்டிய தொழிலதிபர்.. அசால்ட்டாக திருப்பி அனுப்பிய நடிகை?

By Staff

சென்னை: நடிகைக்காக தொழிலதிபர் 20 கோடி ரூபாயை கொட்டியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அந்த நடிகை. பெரிய படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது பப்ளியான உடலாலும்; அழகான நடிப்பாலும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து உச்ச நடிகருடன் அவர் இணைந்து நடித்ததை அடுத்து மேற்கொண்டு பிரபலமானார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: உச்ச நடிகருடன் நடித்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய அவர் கிளாமர் ரோல்களில் நடிக்கவும் தயங்கவில்லை. உச்சக்கட்ட கிளாமர் எல்லாம் காண்பித்த அவரை பார்த்து முதல் படத்தில் ஹோம்லியாக நடித்த நடிகையா இவர் என ரசிகர்கள் வாயை பிளந்தனர்.

It is Gossip in Kollywood that the businessman has poured 20 crore rupees for the actress

முன்னணி நடிகை: எல்லையின்றி கிளாமர் காண்பித்ததால் அவருக்கு நடிகர்கள் முதல் ரசிகர்கள்வரை அடிமையாகினர். அவருடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தனர். இதற்கிடையே அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் கிளாமரை குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

திருமணம்: மேலும் தன்னுடன் வயது குறைந்த ஒருவரை திருமணமும் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தையும் பலர் பலமாக விமர்சித்தனர். ஆனால் அதையெல்லாம் அம்மணி கண்டுகொள்ளவில்லை. நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறார். இந்த சூழலில் நடிகைக்காக தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாயை கொட்டி கொடுக்க தயாராக இருந்தாராம்.

நோ சொன்ன நடிகை: அதாவது அந்த நடிகை மீது தொழிலதிபருக்கு பல வருடங்களாகவே ஒரு கண் இருந்ததாம். அதற்காக தன்னுடைய தொழிலின் விளம்பரத்திற்கு முதலில் நடிகையை அணுகியிருக்கிறார். ஆனால் நடிகையோ ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டாராம். பல முறை ட்ரை செய்து பார்த்த தொழிலதிபர் ஒருகட்டத்தில் ஓய்ந்து போய் மற்ற சில நடிகைகளை பயன்படுத்தினார்.

விடாத ஆசை: தொழிலதிபருக்கு நடிக்கும் ஆசை வந்ததால் நடிகைக்கு திருமணம் ஆகும் முன்பு; தான் அறிமுகமாகும் படத்தில் இந்த நடிகையை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து நடிகையிடம் சென்ற அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் தருகிறேன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாராம். ஆனால் நடிகையோ ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டாராம். கூடுதலாக பணம் தருகிறேன் ப்ளீஸ் நடியுங்கள் என்று சொல்லியும் ப்ளீஸ் கெட் அவுட் என்று நடிகை சொல்லிவிட்டாராம். அந்தக் கோபத்தில்தான் வடநாட்டிலிருந்து 18 கோடி ரூபாய்க்கு ஒரு ஹீரோயினை இறக்குமதி செய்தாராம் தொழிலதிபர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X