மயக்கம் தெளிந்த நடிகர்?.. கலக்கத்தில் தொகுப்பாளினி?.. நடிகரை நம்பி எல்லாத்தையும் கொடுத்தது தப்பா போச்சாம்..
சென்னை: பிரபல நடிகர் சின்னத்திரை தொகுப்பாளினியையும் விட்டுவைக்கவில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் இவர். இந்த நடிகர் அறிமுகமான புதிதில் கடுமையான கிண்டல்களையும், கேலிகளையும் சந்தித்தார். இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு தன்னை நிலைநிறுத்தினார் நடிகர். பல கிண்டல்களை தாண்டி உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பதாலேயே அவரை பலரும் தங்களது ரோல் மாடல்களாக எடுத்துக்கொள்கின்றனர்.

விருதுகள் அள்ளுபவர்: ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த அவர் காலம் போக போக மாற்ற இயக்குநருடன் ஜோடி சேர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் காரணமாக நல்ல நடிகர் என்ற இடத்திலிருந்து சிறந்த நடிகர் என்ற இடத்துக்கு நகர்ந்து ஏகப்பட்ட விருதுகளை வென்று கடல் தாண்டியும் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சர்ச்சை: நடிகரை சுற்றி எவ்வளவு பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. அதிலும் பெண்கள் விஷயத்தில் மனிதர் ரொம்பவே மோசம் என்றுதான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள். ஒரு நடிகை மார்க்கெட்டில் டாப்பில் இருப்பதெல்லாம் அவருக்கு பிரச்னை இல்லையாம் தன்னுடைய கண்களுக்கு பிடித்துவிட்டால் அந்த நடிகைக்கு மார்க்கெட்டே இல்லையென்றாலும் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்துவிடுவாராம்.
தனி வீடு: நடிகருக்கு திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும் மனைவியை தவிர்த்து சில நடிகைகளிடமும் பழக்கம் வைத்திருந்தாராம். அதிலும் மில்க் நடிகைக்காக தனி வீடு ஒன்று எடுத்து அதில் தங்க வைத்து; தன்னுடைய வீட்டுக்கு போகாமல் நடிகையே கதி என்று நடிகர் கிடந்ததாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேச்சு எழுந்தது. பிறகு பெரிய இடத்து தலையீடு காரணமாக அந்த நடிகையின் சேப்டரை க்ளோஸ் செய்தார் நடிகர்.
தொகுப்பாளினி: நடிகையுடன் இருந்த உறவு எல்லை மீறி போனதை அடுத்து மனைவியும் நடிகரை பிரிந்துவிட்டார். இருந்தாலும் கணவனும், மனைவியும் டச்சில்தான் இருக்கிறார்களாம். சூழல் இப்படி இருக்க தற்போது நடிகரை சுற்றி புதிய கிசுகிசு எழுந்திருக்கிறது. அதாவது பெரிய திரை நடிகைகளில் சிலரை வேட்டையாடிய நடிகர் தற்போது சின்னத்திரை பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறாராம்.
குறிப்பாக சின்னத்திரையில் கலக்கிவரும் ஒரு தொகுப்பாளினியை நடிகர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். அவருக்கென்று ஏகப்பட்ட சலுகைகளை நடிகர் செய்தும் கொடுத்தாராம். கடந்த சில வருடங்களாகவே தொகுப்பாளினியிடம் மயங்கி கிடந்த நடிகர் இப்போதுதான் தெளிய ஆரம்பித்திருக்கிறாராம். அதாவது எத்தனை காலம்தான் மனைவியை பிரிந்து மற்ற பெண்களிடம் பழகிக்கொண்டிருப்பது என முடிவெடுத்து தொகுப்பாளினியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருக்கிறாராம்.
தொகுப்பாளினியோ நடிகரை நம்பி தன்னுடைய உறவையே கழற்றிவிட்டவர். மேலும் தன்னையே கொடுத்துவிட்டாராம். அதுமட்டுமின்றி நடிகரை வைத்து சினிமாவில் நினைத்ததை சாதித்துக்கொள்ளலாம் என்ற பிளானிலும் இருந்தாராம். ஆனால் இப்போது தன் மீதான மயக்கத்திலிருந்து தெளிந்து நடிகர் விலக ஆரம்பித்துவிட்டாரே என்ன செய்வது என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் தொகுப்பாளினி..


Click it and Unblock the Notifications











