சரக்குக்கு காசு கேட்டு ரோட்டில் அடி வாங்கிய இயக்குநர்?.. மாதுவில் மட்டுமில்லை மதுவிலும் வீக்காம்

By Staff

சென்னை: பிரபல இயக்குநர் மாது விஷயத்தில் மட்டுமில்லாமல் மது விஷயத்திலும் செம வீக்காம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு ஏரியா பெயரை வைத்து முதல் படத்தை இயக்கியவர் ஸ்வீட் இயக்குநர். அடிப்படையில் நல்ல எழுத்தாளரான அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவருடன் இருந்தவர்கள் எல்லோருமே இப்போது இந்திய அளவில் அங்கீகாரம் பெற்ற இயக்குநர்களாகிவிட்டார்கள். இவரும்கூட இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்தான்.

It is Gossip in Kollywood that the famous director was addicted to alcohol

உருவாக்கிய இயக்குநர்: தற்போது கோலிவுட்டில் பிரபலமான ஹீரோவாக வலம் வருபவரை இந்த இயக்குநர்தான் தன்னுடைய படத்தில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் பெரிய அடையாளம் கிடைத்தது. அந்த அடையாளத்தை இரண்டு பேருமே சரியாக பயன்படுத்திக்கொண்டனர் என்பது சிறப்பு.

முக்கியத்துவம்: ஸ்வீட் இயக்குநரின் அடுத்தடுத்த படங்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களமாகவே இருந்தன. அதனால் இவருக்கென்று தனி மதிப்பு கோலிவுட்டில் எழுந்தது. இயக்குநராக அறிமுகமாகி பல வருடங்கள் ஆனாலும் இன்றுவரை 5லிருந்து 6 படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருக்கிறார். அவற்றில் அத்தனைக்குமே சினிமா ரசிகர்களிடம் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வெளிநாட்டில் விருது: இயக்குநரின் படங்கள் இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும் வெளிநாட்டில் பல விருதுகளை குவிப்பது வழக்கமான ஒன்று. இதனாலேயே அவரை தமிழில் இருக்கும் உலகத்தர இயக்குநர் என்று அவரது ரசிகர்கள் புகழ்வதுண்டு. இப்படிப்பட்ட சூழலில் அவரது இமேஜுக்கு டேமேஜ் வரும் விதமாக சில விஷயங்கள் வெளியே கசிந்திருக்கின்றன.

மாது, மது: அதாவது அவரது படங்கள் எவ்வளவு உன்னதத்தை பேசினாலும் இயக்குநர் அப்படிப்பட்டவர் இல்லை. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் படு வீக் என்பதுதான் சமீபத்திய கிசுகிசு. தற்போது அந்த லிஸ்ட்டில் புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் இணைந்திருக்கிறது. அதாவது ஏரியா பெயர் வைத்த படத்தை முதல் படமாக இயக்கினார் ஸ்வீட் இயக்குநர்.

மது பழக்கம்: ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து அடுத்த பட வாய்ப்பும் உடனடியாக அவருக்கு கிடைக்கவில்லையாம். இதன் காரணமாக விரக்தியின் உச்சத்துக்கே சென்றாராம் இயக்குநர். ஏற்கனவே மது பழக்கம் இருக்கும் அவர்; முதல் படத்தின் தோல்வி மற்றும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காத சோகத்தில் அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தாராம்.

பாரம்பரிய ஊர்: சென்னையில் இருப்பது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து பாரம்பரியமான ஊருக்கு வந்துவிட்டாராம். அங்கு வந்தும் குடிப்பதை அவரால் நிறுத்த முடியவில்லையாம். ஒருகட்டத்தில் கையில் இருந்த காசு எல்லாம் கரைந்து போக; நண்பர்களும் பணம் கொடுக்க மறுத்துவிட்டனராம். இதனையடுத்து பாரம்பரியமான ஊரில் மரியாதைக்குரிய நகரில் இருக்கும் அத்தனை கடைகளிலும் சென்று குடிக்க பணம் கேட்டு அடி வாங்குவாராம் இயக்குநர். அவரை யாரும் பெரிதாக மதிக்கவே மாட்டார்களாம். பல முறை இப்படி ரோட்டில் அடி வாங்கியிருக்கிறாராம்.

ஒரு படைப்பாளி ஒரு புள்ளியில் சுதாரித்துக்கொள்வார் அல்லவா. அப்படி ஒரு புள்ளி அவரது இரண்டாவது பட வாய்ப்பில் தெரிந்துவிட்டதாம். இப்படியே போனால் காணாமல் போய்விடுவோம் என சுதாரித்துக்கொண்ட அவர் இரண்டாம் படத்தில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார். அதனையடுத்து வரிசையாக நல்ல படங்களை கொடுத்து மரியாதையையும் சம்பாதித்துவிட்டார். இருந்தாலும் தன்னுடைய அந்த அசிங்கமான நாட்களை எண்ணி ரொம்பவே வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாராம்.

அதனால்தான் அந்த இயக்குநர் தன்னுடைய தண்ணீர் படத்திலும் இன்னொரு படத்திலும் ஹீரோக்களை மொடா குடிகாரனாக காண்பித்தாராம். அது உண்மையில் தன்னை மனதில் வைத்துதான் அப்படியான காட்சிகளை உருவாக்கினாராம் ஸ்வீட் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X