வீட்டில் வைத்து டார்ச்சர் செய்த நடிகர்.. முழு போதைல படுத்தி எடுப்பாராம்.. நைட்டே கிளம்பிய நடிகை?
சென்னை: நடிகையை வெற்றி நடிகர் அப்பார்ட்மெண்ட் வீட்டில் வைத்து டார்ச்சர் செய்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அறிமுகமான முதல் தமிழ் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் பாப்பா நடிகை. அந்த படத்தில் ஒவ்வொரு சீனிலும் அசால்ட்டாக நடித்து அப்ளாஸை அள்ளியவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்றார்.முக்கியமாக தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார்.

வரிசையான வாய்ப்புகள்: முதல் படத்தில் நல்ல பெயரை பெற்றுவிட்டாலே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கோலிவுட்டின் விதிப்படி நடிகைக்கும் வாய்ப்புகள் வரிசையாக வந்தன. இதன் காரணமாக படு பிஸியாக இருந்தார். வந்த படங்களில் எல்லாம் நடிக்காமல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார்.
தெலுங்கிலும் டாப்: தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிகைக்கு வாய்ப்புகள் வரிசையாக் வர ஆரம்பித்தன. அங்கும் தனது திறமையை காண்பித்ததன் காரணமாக அவருக்கு தெலுங்கு திரையுலகும் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்றது. இதனையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திரைத்துறையினர் கண்டிப்பாக இந்த நடிகை தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்னணி நடிகையாக இருப்பார் ஆரூடம் கூறினர்.
தேடிக்கொண்ட ஆப்பு: ஆனால் அந்த ஆரூடத்தை நடிகையே பொய்யாக்கினார். ஆரம்பத்தில் ஒரு இயக்குநரால் பிரச்னை வந்தது அவருக்கு. அதிலிருந்து மீண்ட அவர் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் பேருந்தை மையமாக வைத்து வெளியான படத்தில் வெற்றி நடிகருடன் ஜோடி போட்டார். இருவரும் சேர்ந்து நடித்தபோது கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டந்து. அதனால் இருவருமே ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தார்களாம்.
தனி அப்பார்ட்மெண்ட்: இருவரும் உருகி உருகி காதலிக்க ஆரம்பித்ததை அடுத்து லிவிங் டூ கெதரில் இருக்க ஆரம்பித்தனர். இதனால் திருவான்மியூரில் கடலை பார்த்தபடி ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வாடகைக்கு குடியேறினார்களாம். ஆரம்பத்தில் சில நாட்கள் அடக்கி வாசித்த நடிகர் போகப்போக தன்னுடைய சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பித்தாராம்.
போதைக்கு அடிமை: நடிகருக்கு போதை பழக்கம் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது. குடி மட்டுமின்றி கஞ்சா, போதை மாத்திரை பழக்கமும் இருந்ததாம். சரி எப்போதாவது செய்வார் என்று நடிகையும் அட்ஜெஸ்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆனால் நடிகர் அதையே முழு நாள் வேலையாக செய்ய ஆரம்பித்தாராம். போதை எடுத்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல் இரவு முழுக்க நடிகையை போட்டு டார்ச்சர் செய்துவிடுவாராம்.
நடிகையோ தன்னுடைய பணம், மனம் என அனைத்தையும் நடிகரிடம் கொடுத்துவிட்டதால் அவரை விட்டு விலக விருப்பம் இல்லாமல் இருந்தாராம். அளவுக்கதிகமான காதல் வைத்திருந்ததால்தான் நடிகர் சொல்படி கேட்டு படங்களிலும் நடிக்காமல் இருந்தாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு நாள் இரவு வெற்றி நடிகர் முழு போதையில் வீட்டுக்கு வந்து நடிகையை அழைத்தாராம்.
ஆனால் அதற்கு நடிகையோ முடியாது என்று திட்டவட்டமாக மறுத்ததால் வெறியான நடிகர் நடிகையை சாத்து சாத்து என்று சாத்திவிட்டாராம். இதனால் விரக்தியான நடிகை இனியும் இவருடன் இருந்தால் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என முடிவெடுத்து அன்றைய இரவே பொட்டி படுக்கையை கட்டிக்கொண்டு அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். அதன் பிறகு நடிகர் பக்கம் நடிகை பார்வையை திருப்பவே இல்லையாம்..


Click it and Unblock the Notifications











