ஒரே ஒருமுறை.. அந்த நடிகைதான் வேண்டுமென அடம் பிடிக்கும் நடிகர்?.. மோகம் இன்னும் போகல போல
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர் பற்றி கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது ஏற்கனவே தன்னுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகைதான் அடுத்த படத்துக்கு ஹீரோயினாக வேண்டுமென அந்த நடிகர் ஓவராகவே அடம் பிடிக்கிறாராம். இதனால் அந்த நடிகையிடம் இயக்குநர் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம். நடிகரின் சிபாரிசு அதிகம் இருப்பதால் கண்டிப்பாக அந்த நடிகைதான் நடிப்பார் என்றும்; நடிகருக்கு இன்னும் நடிகை மேலிருக்கும் மோகம் போகலையே என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
உருவ கேலிகள் பலவற்றை சந்தித்தவர்தான் அந்த நடிகர். ஆரம்பத்தில் அதனை கண்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானாலும் நடிகரோ மனம் தளராமல் தனது திறமையையும், அழகையும் மெருகேற்றி தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது படங்கள் ஒருகட்டத்தில் வரிசையாக ப்ளாப் ஆனாலும் காலம் மாற காட்சிகளும் மாறும் என்பதற்கேற்ப நடிகரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப ஆரம்பித்தன. விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வணிக ரீதியாக பல ரெக்கார்டுகளையும் படைத்தன.

கூடவே கிசுகிசுவும்: ஒருபக்கம் நடிகரின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தாலும் அவரை சுற்றி சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் வளர ஆரம்பித்தன. முக்கியமாக குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்பட்டாலும் அதை ஒரு மாதிரியாக சமாளித்துவிட்டார். ஆனால் நடிகைகளுடன் அவரை தொடர்புப்படுத்தி வந்த கிசுகிசுக்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போனது. ஏற்கனவே நம்பர் நடிகையுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகர் அதனைத் தொடர்ந்து சில நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார்.
மனைவியுடன் பிரச்னை: முக்கியமாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படத்தில் உடன் நடித்த நடிகையுடன் மீண்டும் பல வருடங்கள் கழித்து கிசுகிசுக்கப்பட்டார். இதன் காரணமாக நடிகரின் மனைவியும் நடிகரை பிரிந்துவிட்டதாக பேசப்பட்டது. அதிலும் சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மனைவி தனியாகவே வந்தார். இதனால் இருவருக்குமான பிரிவு உறுதியாகிவிட்டதாகவே பலரும் சொன்னார்கள். இதற்கிடையே வாரிசு நடிகையோடும் அவர் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
பக்கத்திலேயே வீடு: அதிலும் வாரிசு நடிகையை தனது வீட்டுக்கு பக்கத்திலேயே தங்க வைத்ததாகவும்; அடிக்கடி இரவில் இரண்டு பேரும் சந்தித்ததாகவும்; நடிகை வைத்த பார்ட்டியில் நள்ளிரவுக்கு மேல் சென்று நடிகர் கூத்து அடித்துவிட்டு வந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி நம்பர் நடிகையிடம் இருந்த மோகத்தைவிடவும், வாரிசு நடிகையிடம் நடிகருக்கு அதிக மோகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
வேறு பணியில் நடிகர்: இதற்கிடையே நடிகர் கூடிய விரைவில் வேறு பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதன் காரணமாக சீக்கிரமே கோடம்பாக்கத்துக்கு குட் பை சொல்லவிருக்கிறார்ர். சூழல் இப்படி இருக்க நடிகரின் அடுத்த படம் பற்றிய பேச்சுத்தான் கடந்த சில காலமாகவே ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் எழுந்திருக்கிறது.
அடம் பிடிக்கும் நடிகர்: சூழல் இப்படி இருக்க நடிகர் பற்றிய ஒரு கிசுசிசு மீண்டும் கிளம்பியிருக்கிறது. அதாவது தனது அடுத்த படத்துக்கு வாரிசு நடிகைதான் வேண்டுமென்று நடிகர் அடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். ஆனால் இயக்குநரோ கதைக்கு அந்த ஹீரோயின் செட் ஆகமாட்டாங்க என்று சொன்னாலும்; அந்த நடிகைதான் வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருக்கிறாராம் நடிகர். இதனால் இயக்குநர் அப்செட்டாகி நடிகையிடம் பேச்சுவார்த்தையை நடத்தும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட திரைத்துறையினர், நடிகருக்கு இன்னமும் அந்த நடிகை மீதான மோகம் போகவில்லைபோல. அப்படி என்ன வசியம் வைத்திருக்கிறாரோ நடிகை என பேச ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











