ஒன்னா போனா மாட்டுவோம்.. தனித்தனியா போவோம்.. ஹீரோயினுடன் ஹீரோ ஃபாரின் பயணம்.. மோகம் அடங்கலயோ

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் அவர். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு கடந்த சில வருடங்கள் போதாத காலமாகவே இருந்துவருகிறது. ஒருபக்கம் படங்கள் வரிசையாக படுத்துக்கொள்ள; மறுபக்கம் குடும்பத்துக்குள் பஞ்சாயத்துக்கும் தலை தூக்கியதாம். அந்தப் பஞ்சாயத்துக்கு நடிகையுடனான உறவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க மீண்டும் அவரைப் பற்றிய கிசுகிசு ஒன்று கோடம்பாக்கத்தில் வட்டமடிக்கிறது.

இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் அந்த ஆறு எழுத்து நடிகர். குடும்பத்தின் துணையோடு சினிமாவுக்குள் வந்தார், அந்தத் துணையோடுதான் வளர்ந்தார் என்று பலரும் சொன்னாலும்; திறமையின் துணையால்தான் இன்று தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதுதான் கள எதார்த்தம். ஆரம்பகாலத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களையும், கிண்டல்களையும் சந்தித்த அவர்; அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

Gossips Tamil Cinema Kollywood Gossips Hero Gossip

மாஸ் ஹீரோ: தனது திறமையை வளர்த்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் இப்போது மாஸ் ஹீரோ. அவரது படங்கள் விமர்சன ரீதியாக அடியை வாங்கினாலும் பாக்ஸ் ஆபிஸில் அசால்ட் சம்பவம் செய்பவை என்ற பேச்சு கோலிவுட்டில் உண்டு. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் விமர்சன ரீதியாக அடிவாங்கியவைதான். ஆனால் வசூலில் சக்கைப்போடு போட்டன. இதனால்தான் அவரது நாற்காலியை எந்தத் தோல்வியும் அசைத்து பார்க்க முடியவில்லை.

பிஸியான நடிகர்: இப்போதும் அவர் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். வாரிசு இயக்குநரின் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக இளமையான திறமை வாய்ந்த இயக்குநரோடு கை கோர்க்கவிருக்கிறார். அந்தப் படம் நிச்சயம் தனது அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு பலம் சேர்க்கும் என்று தீவிரமாக நம்புகிறார் நடிகர். அவரது ரசிகர்களும் அவ்வாறே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

பஞ்சாயத்து: ஒருபக்கம் நடிப்பில் சூரப்புலியாக இருக்கும் அவர்; பெண்கள் விஷயத்தில் வீக் என்றும் பெயர் எடுத்திருக்கிறார். முக்கியமாக ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்பு நடிகையுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகர்; இப்போது மீண்டும் அந்த நடிகையுடன் கிசுகிசுக்கப்படுகிறார். மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இயக்கத்தில் உருவான படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது; அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டது. இதன் காரணமாக நடிகரின் வீட்டுக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள்.

வெளிநாடு பறந்த நடிகர்: நிலைமை இப்படி இருக்க இந்தப் பஞ்சாயத்து தீர வேண்டுமென்றால் அந்த நடிகையுடனான உறவை முடித்துக்கொள்வதுதான் ஒரே வழி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருக்கிறார்கள். அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு சைலெண்ட்டாக ஒரு சம்பவத்தை செய்திருக்கிறாராம் நடிகர். அதாவது ஓய்வு எடுப்பதற்காக அந்த நடிகையுடன் இப்போது வெளிநாடு பறந்திருக்கிறாராம். இருவரும் சேர்ந்து மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஒன்றாக போனால் மாட்டிக்கொள்வோம் என்று இருவரும் தனித்தனியாக இந்தியாவிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் எப்படியோ இந்த விஷயம் நடிகரின் வீட்டுக்கு தெரிந்துவிட்டதாம். எனவே கொஞ்சம் கோபம் குறைந்திருந்த நடிகரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து மீண்டும் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்றிருக்கிறாராம். மேலும் அந்த நடிகையிடமிருந்து நடிகரை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட வேண்டுமென்ற முயற்சி தொடர்ந்து தோல்வியடைவதால் மனைவி சோகத்திலும் இருக்கிறாராம். ஆகமொத்தம் எவ்வளவு பஞ்சாயத்து வந்தாலும் நடிகை மீது நடிகருக்கு இருக்கும் மோகம் எப்போதுமே தீராது போல கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X