மாற்றுத்திறனாளியிடமுமா அப்படி.. பழ இயக்குநர் ரொம்பவே மோசம்?.. நடிகையும் அவர் கன்ட்ரோலாம்
சென்னை: பழ இயக்குநர் பற்றிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மதிக்கக்கூடிய இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருந்தவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பழ இயக்குநர். குருநாதருடன் பல வருடங்கள் இருந்துவிட்டு கலைக்குடும்பத்திலிருந்து ஒரு வாரிசை வைத்து முதல் படத்தை எடுத்தார். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக அடிவாங்கியது. அதனையடுத்து தற்போது ஆக்டிவ்வாக இல்லாத நடிகரை வைத்து முதல் படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

சின்னத்திரை டூ சினிமா: தான் இயக்கிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் சில வருடங்களுக்கு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார் பழம். ஒருகட்டத்தில் மீண்டும் சினிமா கதவு திறக்க தன்னுடைய நண்பரை வைத்து முதல் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட். அடடா இப்படி ஒரு இயக்குநரா இவர் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அதனையடுத்து அவர் இயக்கிய படங்களும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய படம்கூட ஹிட்டடித்தது.
இப்படியும் இருப்பாரா?: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ஜொலிக்கும் அவரைப் பற்றிய விஷயம் ஒன்று பரபரப்பாக கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தனது இரண்டாவது இன்னிங்ஸில் நண்பரை வைத்து படம் இயக்கினாரே அதில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் நடித்திருப்பார். வேறு மாநிலத்தை சேர்ந்த அவர் தயாரிப்பாளரிடம் நேரடி ரெக்கமெண்ட்டில்தான் இந்தப் படத்தில் நடித்தாராம்.
நல்ல தயாரிப்பாளர்: அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோலிவுட்டில் பல காலமாக இருப்பவர். மேலும் சுத்தமானவர் என்று பெயரும் எடுத்தவர். அதனால் அவரது படத்தில் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற மட்டமான வேலைகளுக்கு இடம் இல்லாமல் இருக்கும். ஆனால் பழ இயக்குநருக்கோ அந்த மாற்றுத்திறனாளி நடிகை மீது ஒரு கண்ணாம். இருந்தாலும் ஸ்ட்ரிக்ட்டான தயாரிப்பாளரின் கீழ் இருப்பதால் வால் ஆட்ட முடியாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.
பாகம் இரண்டு: ஒரு வழியாக அந்தப் படம் ஹிட்டாகி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதிலும் அந்த நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். மேலும் அந்த நடிகையும் கண்டிப்பாக நமக்கு இதில் சான்ஸ் இருக்கும் என நம்பி இயக்குநரிடம் சென்றாராம். ஆனால் இயக்குநரோ இதற்கு முன் செய்ய முடியாததை இதில் செய்துகொள்ள முடிவு செய்து அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தாராம். நடிகை திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். இயக்குநர் எவ்வளவு சொல்லியும் நோ மீன்ஸ் நோ என்று நடிகை சொல்லிவிட்டதால் அவரை படத்திலிருந்து கழற்றிவிட்டுவிட்டாராம் இயக்குநர்.
கட்டுப்பாட்டில் நடிகை: அந்த நடிகைக்கு பதிலாக வளர்ந்துவரும் நடிகையை அதில் நடிக்க வைத்தார் பழ இயக்குநர். அந்த நடிகையுடன் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நெருக்கம் காட்டி காட்டி கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டாராம். நடிகையும் சித்தம் இழந்து பழ இயக்குநருக்கு மயங்கிவிட்டாராம். அந்தப் படத்துக்கு பிறகு ஒரு வீட்டில் தங்க வைத்து இயக்குநர் அடிக்கடி சென்றுவருவாராம்.
அதுமட்டுமின்றி அந்த நடிகையிடம் யாரேனும் கதை சொல்ல வந்தால் முதலில் அவரிடம் சென்று சொல்லுங்கள் என்று அனுப்பிவைப்பாராம். இன்றுவரை அந்தக் கதை தொடர்ந்துகொண்டிருக்கிறதாம். இவருடைய குருநாதர் பெண்கள் விஷயத்தில் நேர்மையான ஆள். ஆனால் இந்த பழ இயக்குநரோ பெண்கள் விஷயத்தில் பலான ஆளா இருக்கிறாரே. அதுவும் மாற்றுத்திறனாளி பெண்ணைக்கூடவா விடமாட்டார் என்று கோடம்பாக்கத்தில் குரல்கள் பலமாகவே எழ ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











