பெரிய மொதலாளி, இன்னும் ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்தவே இல்லையா?
Recommended Video

சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சியை நேற்று பார்த்தவர்கள் இன்னும் ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்தவே இல்லையா என்று தான் கேட்கிறார்கள்.
பெரிய முதலாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களில் தாடிக்காரருக்கும், இளம் நடிகைக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் முறியவே நடிகை நிகழ்ச்சியை விட்டு கிளம்ப வேண்டும் என்று அடம்பிடித்து கிளம்பினார்.
இது அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்தது தான்.

காதல்
பெரிய முதலாளி நிகழ்ச்சியின் 2வது சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவானது. தற்போது அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண் நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

காப்பி
இந்தி நிகழ்ச்சியில் இருந்து காட்சிகளை காப்பியடித்தார்கள் சரி என்று மக்கள் பொறுத்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த அதே காட்சியை மீண்டும் வைப்பதா?

மாற்றம்
முதலில் அந்த ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்கப்பா என்று விமர்சனம் எழுந்துள்ளது. பெரிய முதலாளி வீட்டில் ஸ்கிரிப்ட் படி தான் எல்லாம் நடக்கிறது என்று கடந்த சீசனில் இருந்தே கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரே காட்சி மீண்டும் வந்துள்ளதில் அதில் உறுதியாகிவிட்டது.

சேட்டை
பெரிய முதலாளி வீட்டில் உள்ள நடிகர் ஒருவர் பெண் போட்டியாளர்களுடன் சேர்ந்து லூட்டி அடித்தே பார்வையாளர்களை கோபம் அடைய செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










