நைட்டுக்கு அது கிடைக்காமல் அசிங்கமா திட்டிய ஐட்டம் டான்ஸர்.. நிகழ்ச்சி முடிந்தவுடனே நடந்த அலப்பறை!
சென்னை: பழைய ஆட்டக்காரியை ஓரங்கட்டிவிட்டு புதிய ஆட்டக்காரியை பூ படத்தில் இறக்கிய நிலையில், அந்த புதிய ஆட்டக்காரி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் செய்த அலப்பறைகள் குறித்து தான் கோலிவுட்டில் தற்போது பேச்சுக்கள் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு பாட்டுக்கு நடனமாடினாலும் அந்த நடிகையை கொண்டு வந்து ரசிகர்களிடம் காட்டினால் தான் கல்லா கட்ட முடியும் என பல லட்சம் செலவு செய்து அழைத்து வந்திருக்கிறாராம் அந்த ஸ்டைல் நடிகர்.
முதல் படத்தில் பண்ணதை போலவே இந்த படத்திலும் என்னை டம்மி பீஸாக மாற்ற பார்க்குறீங்களா என ஹீரோயின் வேறு ஸ்டைல் நடிகரிடம் ரொம்பவே கோபத்தைக் காட்டினாராம். ஆனால், இதெல்லாம் வியாபார தந்திரம் என அவரை சமாதானம் செய்த நடிகர் அந்த ஹீரோயின் வாயை அடைக்க வேண்டிய விஷயங்களை செய்து பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தாராம்.

ஆனால், அந்த நடிகையை சமாளித்த நடிகரால் அந்த ஆட்டக்காரி நடிகையை சமாளிக்கவே முடியவில்லை என பேச்சுக்கள் புகைந்து வருகிறது.
லட்சக்கணக்கில் செலவு: புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நடிகர்களை கூட அழைத்து வந்து விடலாம். ஆனால், ஒரு ஹீரோயினை அழைத்து வந்தால் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு பல லட்சங்கள் செலவுகளை இழுத்து விட்டு விடுவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பி வரும் நிலையில், அந்த ஸ்டைல் நடிகர் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்களை அழைத்து வந்து படு ஜோராக புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார். இரண்டு நடிகைகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கும் மேல் அவர்களுக்கான சம்பளம், போக்குவரத்து செலவு, அவர்களுடைய குழுவுக்கான செலவு என பெரிய பில் போட்டிருப்பதாக கூறுகின்றனர்.
கூலிங் பீர் கிடைக்கல: நடிகைக்கு தேவையான உணவு முதல் விருப்பப்பட்ட ஹோட்டல் ரூம் வரை அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பு நிறுவனம் பார்த்து பார்த்து செலவு செய்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததுமே நடிகை கூலிங் பீர் கேட்டிருந்தாராம். அதுமட்டும் வரவில்லை என புரொடக்ஷன் பாயை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்து விட்டார் என பெரிய பஞ்சாயத்தே வெடித்துள்ளது.
கோலிவுட் தயாரிப்பாளர் கதி: பக்கத்து ஸ்டேட் தயாரிப்பாளர் படத்திலேயே இந்த பந்தா பண்ணும் அந்த ஆட்டக்கார நடிகை அடுத்து கோலிவுட் படத்தில் நடிக்கவுள்ள நிலையில், சம்பளத்தில் தொடங்கி ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட்டு விடுவாரே, இவர் நமக்குத் தேவைதானா என படக்குழுவினர் இந்த விஷயத்தை வைத்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











