சமத்து நடிகையின் அந்த பாடல் சர்ச்சையில் சிக்க யார் காரணம் தெரியுமா? இப்படியுமா பண்ணுவாங்க?

By Staff

சென்னை: நீண்ட நாட்கள் கழித்து வித்தியாசமாக ஒரு பாடல் வரிகளுக்கு திடீரென சர்ச்சை கிளம்பி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

சமத்து நடிகையின் குத்தாட்ட பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திடீரென ஏன் எதிர்ப்புகள் கிளம்பின என்பது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை உருவாக்கியது.

பக்கத்து ஸ்டேட் ஸ்டைல் நடிகர் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு என விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், சமத்து நடிகை நடித்தது தான் அந்த பாடலுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பவே முக்கிய காரணம் என ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாடல் சர்ச்சை

பாடல் சர்ச்சை

பாடல் வரிகள் அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்புவது வழக்கம் தான் என்றாலும் இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக ஒரு சர்ச்சை கிளம்பி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை ஷாக் ஆக்கி உள்ளது. மேலும், வெகு சிலர் மட்டுமே அந்த பாடலுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு வித சந்தேகத்தையும் கிளப்பியது.

வேறு நடிகை

வேறு நடிகை

இதுவே இந்த பாடலுக்கு சமத்து நடிகை நடனம் ஆடாமல் வேறு எந்தவொரு நடிகை நடனம் ஆடி இருந்தாலும் இப்படியொரு சர்ச்சை கிளம்பி இருக்கவே இருக்காது என்றும் அந்த நடிகை நடித்ததன் காரணமாகவே அந்த பாடல் டார்கெட் செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

முன்னாள் கணவர்

முன்னாள் கணவர்

விவகாரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அந்த நடிகைக்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சனைகளை கணவர் தரப்பு கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த பாடல் விவகார பிரச்சனையிலும் முன்னாள் கணவர் தரப்பு தான் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

யார் காரணம்

யார் காரணம்

ரசிகர்கள் போட்டி கோலிவுட்டை போலவே எல்லா இடங்களிலும் உள்ளன. நடிகையின் முன்னாள் கணவர் ரசிகர்கள் தான் சூப்பர் ஹிட் ஆன அந்த பாடலை மடக்க என்ன செய்யலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், பாடல் வரிகளுக்கு எதிராக புகார்களை கிளப்பி இப்படியொரு சர்ச்சையை கிளப்பி உள்ளதாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பேசிக் கொள்கின்றனர்.

அசுர வளர்ச்சி

அசுர வளர்ச்சி

சமத்து நடிகையின் அசுர வளர்ச்சி பிடிக்காமல் யார் என்ன செய்தாலும், அவர் ஏகப்பட்ட உச்சங்களை தொட்டுக் கொண்டே இருப்பார் என்றும் எங்களுடைய முழு சப்போர்ட்டும் நடிகைக்கு இருக்கும் என நடிகையின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது நடிகைக்கு பெரும் நிம்மதியையும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X