»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு கால கட்டங்களில் ஒவ்வொரு காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்படும். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும்காதல் ஜோடி. நடிகை ஜோதிகாவும், நடிகர் சூர்யாவுக்கும் காதல் என காற்றில் செய்தி கசிகிறது. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் சேர்ந்துநடித்தனர். அப்பொழுதுதான் காதல் துளிர்த்ததாம்.

சூர்யா கொஞ்சம் ரிசர்வ் டைப். ஆனா ஜென்டில்மேன். நல்ல மனிதர் என்கிறார் ஜோதிகா. சூர்யாவிடம் விசாரித்தால்... லவ் அது இதுன்னு சொல்வாங்க,அப்படியெல்லாம் இல்லை. நல்ல நடிகை அவர். மும்பை பெண் என்பதால் எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். அதேமாதிரிதான் என்னிடம் பழகுகிறார்.என்கிறார்.

இருவருமே, அடிக்கடி வீட்டுக்கு போன் செய்து பேசிக் கொள்கிறார்கள். சூர்யா வீட்டில், இது நட்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் காதல் மலர்ந்துவிட்டது. அடுத்து டும்டும் டுமக்கதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Read more about: ajith, cinema, jothika, surya, vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil