»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

ஜோதிகா இதுவரை வசித்து வந்த தனது அக்கா நக்மாவின் சென்னை வீட்டைக் காலி செய்துவிட்டார்.

இப்போது தோழி நடிகை ஒருவரின் வீட்டில் குடி புகுந்துள்ளார். இதுவரை இவர் நக்மாவுக்குச் சொந்தமான வீட்டில் தான் இருந்து வந்தார்.

ஆனால், தமிழில் இருந்து இந்திக்குப் போய் கங்கூலி உள்பட சிலரைக் காதலித்துவிட்டு, பின்னர் இந்தியிலும் வாய்ப்புக்கள் இல்லாததால்ஆன்மிகப் பாதைக்கு மாறி பெங்களூரில் ஒரு ஆஸ்ரமத்தில் கொஞ்ச காலம் காலம் தள்ளிய நக்மாவுக்கு மீண்டும் தமிழ் சினிமா மீது ஆசைவந்துவிட்டது.

தமிழில் வாய்ப்புத் தேட அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னை வர உள்ள அவர் தனது வீட்டைக் கொடுக்குமாறு ஜோதிகாவிடம் கூறியுள்ளார். அக்காவுடன் சேர்ந்து வசிக்க ஜோதிகா தயார் தான். ஆனால், பிரைவசி இருக்காதுஎன்று நக்மா கூறிவிட்டதால் கடுப்பாகிப்போன ஜோதிகா, நீயாச்சு, உன் வீடாச்சு என்று கூறிவிட்டு பெட்டிப் படுக்கையுடன் ஜாகை மாறிவிட்டாராம்.

தனது மாஜி காதலர் சரத்குமாருக்குப் பயந்து தான் தமிழ்நாட்டை விட்டே போனார் நக்மா என்று கூறப்பட்டது.

ஆனால், அவர் சித்தியோடுகுடும்பஸ்தனாக செட்டில் ஆகிவிட்டதால் இப்போது தனக்கு சென்னையில் பிரச்சனை ஏதும் இருக்காது என்று நினைக்கிறாராம் நக்மா.

சினிமாவையே விட்டுவிட்டு ஆன்மீகத்துப் போன நக்மாவுக்கு அது போராடித்துவிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் அணூணா ணிஞூ டூடிதிடிணஞ் ஆஸ்ரமநடவடிக்கைகளில் தீவிரமாய் இறங்கி, மற்றவர்களுக்கு கிளாஸ் கூட எடுத்தார் நக்மா.

இப்போது அங்கு அவரைப் பார்க்க முடியவதில்லை. மும்பை தண்ணி பார்ட்டிகளில் அதிகம் அடிபடுகிறார்.

இப்போது தோழி நடிகை வீட்டில் உள்ள ஜோதிகாவை அங்கு வைத்து தான் சூர்யமான நடிகர் அடிக்கடி சந்திக்கிறார். இருவரும் எந்தநேரமும் டும்.. டும்.. கொட்டலாம் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil