சின்னத்திரை நடிகரின் சில்மிஷம்.. சிக்கிக் கொண்டு தவிக்கும் ஜூனியர் நடிகை.. இப்படி எல்லாமா செய்வாங்க?
சென்னை: சீரியல் உலகத்துல பார்க்குறதுக்கு அப்படியே நல்லவரா நடிச்சுட்டு, நிஜ வாழ்க்கையில மோசமா சில நடிகர்கள் நடந்துக்கிறதை பத்தி அடிக்கடி செய்திகள் வர்றது உண்டு. அந்த வகையில இப்போ சின்னத்திரையில டாப் ரேட்டிங்ல போயிட்டு இருக்குற ஒரு சீரியலின் கதாநாயகனைப் பத்தின விவகாரம்தான் இப்போ சின்னத்திரை வட்டாரத்துல பெரும் புகச்சலை ஏற்படுத்தியிருக்கு.
சீரியல்ல குடும்ப குத்துவிளக்கா, ரொம்ப அமைதியா வலம் வர்ற அந்த நடிகருக்கு நிஜத்துல பெண்களைப் பார்த்தாலே ஒரு பலகீனமாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு புதுசா வர்ற ஜூனியர் நடிகைகள், சைடு ரோல் பண்ற பொண்ணுங்ககிட்ட ஆரம்பத்துல ரொம்ப நாகரீகமா பேசுற மாதிரி பேசி, அப்புறம் மெல்ல மெல்ல அவங்களோட சில்மிஷங்களை ஆரம்பிக்கிறது இவரோட வழக்கமாம்.
வலையில் விழுந்த ஜூனியர் நடிகை: சமீபத்துல அந்த சீரியல்ல சின்னதா ஒரு கேரக்டர் பண்றதுக்காக ரொம்ப ஏழ்மையான குடும்ப பின்னணியில இருந்து ஒரு ஜூனியர் நடிகை வந்திருக்காங்க. சினிமா, சீரியல்ல எப்படியாவது ஜெயிச்சு தன் குடும்பத்தை காப்பாத்தணும்னு வந்த அந்தப் பொண்ணை, இந்த டாப் நடிகர் நோட்டம் விட்டிருக்காரு.

"உனக்கு நல்ல திறமை இருக்கு, உன்னை பெரிய லெவலுக்கு கொண்டு போறேன்"னு பொய் வாக்குறுதி கொடுத்திருக்காரு. டைரக்டர், புரொடியூசர்கிட்ட பேசி பெரிய ரோல் வாங்கித் தர்றேன்னு சொல்லி, அந்தப் பொண்ணோட நம்பரை வாங்கியிருக்காரு. ஆரம்பத்துல நைட்டெல்லாம் போன் பேசி, அப்புறம் மெல்ல மெல்ல அந்தப் பொண்ணை தனியா வரச் சொல்லி வற்புறுத்தியிருக்காருனு ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு.
மிரட்டலும்.. தவிப்பும்: நடிகரோட சில்மிஷங்கள் எல்லையை மீறவும், அந்த ஜூனியர் நடிகை உஷாராகி அவரிடமிருந்து விலகப் பார்த்திருக்காங்க. ஆனா, அங்கதான் அந்த நடிகரோட அசல் முகம் வெளிப்பட்டிருக்கு. "நான் நினைச்சா உன்னை இந்த சீரியலை விட்டு தூக்கிடுவேன். அதுக்கப்புறம் உனக்கு எந்தச் சேனல்லயும் வாய்ப்பு கிடைக்காம பண்ணிடுவேன்"னு மிரட்டல் டோனில பேச ஆரம்பிச்சிருக்காரு.
சீக்கிரமே வெடிக்கப்போகுது: "வாய்ப்பு வேணும்னா நான் சொல்றபடிதான் கேட்கணும்"னு அந்த நடிகர் மிரட்டுறதால, அந்த இளம் நடிகை இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம, யார்கிட்டயும் சொல்ல முடியாம தவித்து வர்றாங்களாம். சீரியல் டீம்ல இருக்குற சிலருக்கு இந்த விவகாரம் அரசல் புரசலா தெரிஞ்சாலும், "அவன் பெரிய ஆளு, அவன்கிட்ட போய் வம்பு வச்சுக்காதீங்க"னு அந்தப் பொண்ணுக்கே அட்வைஸ் பண்றாங்களாம். "டிவியில பார்க்கும்போது அவ்வளவு நல்லவரா தெரியுறாரு, ஆனா நிஜத்துல இப்படி எல்லாமா செய்வாங்க?"னு விபரம் தெரிஞ்ச ஒரு சிலர் அந்த நடிகரை தங்களுக்குள் பேசும் போது மட்டும் விளாசி வருகிறார்கள். இந்த விவகாரம் எப்போ வெடிக்கப் போகுதோன்னு சின்னத்திரையே இப்போ பரபரப்பா இருக்கு.


Click it and Unblock the Notifications