Don't Miss!
- Finance
ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம்.. ஒடிசா விவசாயிக்கு ஜாக்பாட்..!
- News
பத்தாண்டுகால வனவாசம்..பாதை யாத்திரை.. காங்கிரஸ் குழுவில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
- Automobiles
கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!
- Technology
ரொம்ப மெல்லிய பட்ஜெட் விலை டேப்லெட்: பார்க்க அப்படி இருக்கு- உயர் அம்சங்களோடு ஒப்போ பேட் ஏர் அறிமுகம்!
- Lifestyle
இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
- Sports
சிஎஸ்கேக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அம்மாவை அம்போ என நடுத்தெருவில் விட்ட வாரிசு நடிகைகள்.. இத்தனை படங்கள் நடித்தும் எல்லாம் வீணா?
சென்னை: சினிமா உலகமே வியந்து பார்க்கும் அந்த பிரபல நடிகரின் முன்னாள் மனைவி பணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கணவர் தான் கழட்டிவிட்டார் என பார்த்தால் அந்த நடிகை பெத்த இரு மகள்களும் கூட கண்டுக்கொள்ளவில்லையா? என்கிற கேள்வி பூதாகரமாகி உள்ளது.
குடும்பத்தின் டச்சிலே இல்லாமல் ஒரு மகள் புதிய பாய் ஃபிரெண்டே கதி என இருந்து வரும் நிலையில், அம்மாவை அம்போ என விட்டு விட்டு இன்னொரு மகளும் அப்பாவிடம் வாய்ப்புக்காக ஐக்கியமாகி உள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
தனுஷின் 20 ஆண்டு சினிமா வாழ்க்கை...எண்ணம் போல் வாழ்க்கைன்னு யாரைச் சொன்னார்?

பிரபலத்தின் எக்ஸ்
நடிகையாக கலக்கிக் கொண்டிருந்தவரை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக் கொண்டு வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டார் அந்த நடிகர். சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டு குடும்பத்தையும் கணவரது படங்களையும் கவனித்துக் கொண்டிருந்தவருக்கு கணவரின் செய்கைகள் பிடிக்காத நிலையில், இருவரும் பிரிந்து விட்டனர்.

பெற்றோர்களை போலவே
நடிக்கவே வரவில்லை என்றாலும், அப்பா மற்றும் அம்மா இருவரும் பெரிய நடிகர்கள் என்பதால், அவர்களை போலவே சினிமாவில் நடிகைகளாக வேண்டும் என அக்காவை தொடர்ந்து தங்கையும் வாரிசு நடிகையாக மாறியது தான் மிச்சம். ஆனால், இன்னமும் இருவரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உருப்படியக ஒன்றில் கூட நடிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

காதலனுடன் குடித்தனம்
வெளிநாட்டு காதலருடன் டேட்டிங்கில் இருந்து வந்த நடிகையை அவர் கழட்டி விட்டு கிளம்பிய நிலையில், புதிதாக ஒரு பாய் ஃபிரண்டை பிடித்துள்ள வாரிசு நடிகை அவருடனே திருமணம் ஆகாமல் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். சிபாரிசுடன் கிடைக்கும் சில படங்களில் நடித்து காலத்தை ஓட்டி வருகிறார்.

அம்மாவை விட்டுவிட்டு
அக்காவை போலவே தானும் பெரிய நடிகை ஆக வேண்டும் என நினைத்து சினிமாவுக்குள் குதித்த சின்ன பெண்ணுக்கு நடிப்பே வரவில்லை. இதுதான் நடிப்பு, இதுதான் புரட்சி என கேவலமான காட்சிகளில் சமீபத்தில் நடித்து ஃபீல்ட் அவுட் ஆகி விட்டார். அம்மாவின் செல்லப் பெண்ணாக இருந்து வந்த அவரும் தற்போது அம்மாவை அம்போ என விட்டுவிட்டு அப்பாவிடம் தஞ்சம் புகுந்துள்ளாராம்.

பிச்சை எடுக்காத குறை
பெத்த இரண்டு மகள்களும் நடிகையானது தான் மிச்சமே தவிர தனக்கு ஒரு பைசா கூட உதவவில்லை என சமீபத்தில் அம்மா நடிகை அழுவாத குறையாக புலம்பித் தள்ளி உள்ளார். மேலும், சமீபத்தில் பிச்சை எடுக்காத குறையாக கிடைக்கும் சிறிய கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்புகளை தேடி தேடி இந்த வயதான காலத்தில் அலைந்து வருகிறாராம்.