»   »  விருந்து கொடுக்கும் ஜோதிர்

விருந்து கொடுக்கும் ஜோதிர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிர்மயியின் விருந்து டேக்டிக்ஸ்தான் இப்போது கோலிவுட்டின் சூடான கிசுகிசு.

முன்னணி ஹீரோக்களையும், பட வாய்ப்புகளையும் பறிக்க ஹீரோயின்கள் பலவிதஉபாயங்களை கையாளுவது சாதாரணமான விஷயம். ஹீரோக்களுடன் படுநெருக்கமாக பழகுவது, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தை நட்பு பிடித்துக்கொண்டு அவர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் ஜோடியாக நடிப்பது எனபல உபாயங்கள் உள்ளன.

ஆசின் இதுபோன்ற ஒரு வழியைக் கடைப்பிடித்துத்தான் பட வாய்ப்புகளை அள்ளிவருகிறார். விஜய், விக்ரம், அஜீத் என குறிப்பிட்ட சில ஹீரோக்களுடன் மட்டும்தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்துள்ள ஆசின் இந்த ஹீரோக்களின்குடும்ங்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இதன் மூலம் மாறி மாறி ஒருஹீரோவின் படத்தில் இடம்பெற்று வாய்ப்பை வாரி வருகிறார்.

இந்த வரிசையில் ஜோதிர்மயி ஒரு சூப்பர் வழியைப் பயன்படுத்தி வாய்ப்புகளைப்பிடிக்கிறாராம். ஜோதிர்மயியின் ரூட் என்னவென்றால் விருந்து வைப்பது. தனக்குப்பிடித்த ஹீரோவின் படத்தில் நடிக்க அவருக்கு நட்சத்திர ஹோட்டலில் செமத்தியானவிருந்து வைத்து கும்மாக கவனிக்கிறாராம்.

ஹீரோக்களுக்கு மட்டுமல்லாது விஐபி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் இந்தவிருந்துப் பட்டியலில் இடம்பெறுகிறார்களாம். தலைநகரம் படத்திலும் சுந்தர்.சி.க்குஜோடியாக நடிக்க குஷ்புவுக்கும் விருந்து கொடுத்தாராம் ஜோதிர்.

விருந்தில் சந்தோஷமாகிப் போகும் ஹீரோக்களும், இயக்குனர்களும் தங்களதுபடங்களில் ஜோதிருக்கு ரோல் வாங்கிக் கொடுத்து ஜோதிருக்கு சந்தோஷம்அளிக்கின்றனராம்.

இதே பாணியில் தனது சொந்த ஊரான மலையாளத்திலும் சூப்பர் வாய்ப்புகளைஅள்ளி வருகிறாராம் ஜோதிர்மயி. மலையாளத்தில் ஜோதிர் கையில் இரண்டு படங்கள்இருக்கின்றன. தமிழில் இப்போது சத்யராஜுடன் பெரியார் படத்தில் நாகம்மைவேடத்தில் நடித்து வருகிறார் ஜோதிர்.

கல்யாணமாகி, குழந்தையையும் பெற்ற ஜோதிருக்கெல்லாம் வாய்ப்புகிடைக்கும்போது நமக்கு மட்டும் கிடைக்காமல் போவதேன் என சில கன்னிநாயகிகள் கடுப்புடன் புலம்பி வருகிறார்களாம்.

Read more about: jyothirmayis technique

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil