»   »  குஷ்புவின் ஜோதிர்பிரச்சனை!

குஷ்புவின் ஜோதிர்பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

ஊருக்கெல்லாம் நீதி சொல்வானாம், ஆனால் உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட அக்கப்போராம்! அந்தக் கதையாகி விட்டது குஷ்புவின் கதை.

ஆம்பளைஸும், பொம்பளைஸும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,முன்னெச்சரிக்கை மட்டும் அவசியம் என்று சொல்லப் போய் ஏகப்பட்ட ஏச்சுப்பேச்சுக்களை வாங்கிக் கொண்ட குஷ்பு இப்போது ரொம்ப சமர்த்தாக இருந்துவருகிறார்.

ஷூட்டிங் போவதும், வீட்டுக்குத் திரும்புவதுமாக அடக்கம் ஒடுக்கமாகி விட்டகுஷ்புக்கு வீட்டுக்காரர் சுந்தர்.சி. மூலம் ஒரு புதுப் பிரச்சினை வந்துள்ளதாம்.

நான் ஹீரோவாக நடிக்கட்டுமா என்று சுந்தர்.சி. தன்னைக் கேட்டபோது, ஒய் நாட்டார்லிங் என்று உடனே ஓ.கே சொன்னவர் குஷ்பு.


அத்தோடு நில்லாமல் அவருக்கான ஹீரோயினையும் அவரே அலசிப் பார்த்துகடைசியில் கேரளத்து ஜோதிர்மயியை புக் செய்தார்.

தலைநகரம் என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை குஷ்புவே தனது சொந்தக்கம்பெனி மூலம் தயாரித்தும் வருகிறார்.

ஷூட்டிங் படு வேகமாக நடந்து வந்த நிலையில் இப்போது ஜோதிர்மயி, குஷ்புவுக்குபெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளாராம்.

மலையாளத்தில் கொஞ்சம் போல படங்களில் நடித்து, ஒரு கல்யாணம், ஒருவிவகாரத்தும் ஆகி, அப்படியே ஜகா வாங்கி தமிழுக்குப் புகுந்தவர்தான் ஜோதிர்மயி.


இதயத் திருடன் படத்தில் மொட்ட பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டவர்.

மற்ற முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் சுந்தர்.சியுடன் நடிக்க பயந்து ஓடிப்போனபோது, உடனே ஒப்புக் கொண்டவர் ஜோதிர்மயி என்பதால் குஷ்புவும்,சுந்தர்.சியும், ஜோதிர் மேல் ரொம்ப பாசமாக இருந்தார்கள்.

இந்தப் பாசம்தான் இப்போது சுந்தர்.சியை வழுக்கி விழ வைத்து விட்டதாம்.சுந்தர்.சிக்கும், ஜோதிர்மயிக்கும் இடையே பெவிகால் போட்டு ஒட்டியது போல நட்புஉருவாகி, வலுப்பட்டு, குஷ்பு வாழ்க்கையை பதம் பார்க்கும் அளவுக்குப் போய்விட்டதாம்.

டிவி தொடர், கேம் ஷோவுக்கான ஷூட்டிங் என குஷ்பு படு பிசியாக இருந்ததால்,தலைநகரம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் அடிக்கடி போவதில்லை.


இது சுந்தர்.சிக்கும், ஜோதிருக்கும் வசதியாகிப் போய் விட இருவரும் மனம் விட்டுப்பழக வாய்ப்பாகி விட்டதாம். இது குஷ்புவுக்குத் தெரிய வர அப்செட் ஆகிவிட்டாராம்.

அதை விட பெரிய அதிர்ச்சி, காதல் காட்சிகள் என்ற பெயரில் சுந்தர்.சியும்,ஜோதிர்மயியும் நடித்துள்ள ஏ ரக காட்சிகள்தானாம்.

சமீபத்தில் இதுவரை எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்த குஷ்பு, கணவரும்,ஜோதிர்மயியும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக நடித்திருந்த காட்சிகளைப் பார்த்துவிதிர்த்துப் போய் விட்டாராம்.

இதற்கு மேல் விட்டால் ஆபத்தாகி விடும் என்று பயந்து போன அவர் இப்போதுஅடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளாராம்.

இதனால் சுந்தர்.சி. அப்செட்.

இந்தப் பிரச்சினை போதாதென்று, குஷ்புவின் மூத்த மகள், அம்மாவிடம் நீ இனிமேல்நடிக்க வேண்டாம், உன்னைப் பத்தி தப்புத் தப்பா செய்திகள் வருகிறதே என்று கேட்டுகுடைய ஆரம்பித்துள்ளாராம்.

இதனால் நடிப்பை விட்டு விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளாராம் குஷ்பு.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil