உற்சாக பிரியை கஜாலா மதராஸி படத்தை முடிப்பதற்குள் கஜாலாவால் பெரும்பாடு பட்டு விட்டாராம் அர்ஜூன்.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதராஸி. பெரும்பாலான போர்ஷன்களை முடித்து விட்ட அர்ஜூன், ஹீரோயின்கஜாலாவால் நொம்பலப்பட்டுப் போனதை சொல்லி சொல்லி மாய்கிறார்கள் யூனிட்டார்.ஏற்கனவே அர்ஜூனுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்தான் கஜாலா. அவருடன் நடித்தபோதுதான் காதல் தோல்வியால்தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கஜாலாவுடன் முந்தைய படத்தில் நடித்த அனுபவத்தை வைத்துஅவரையே தனது மதராஸி படத்திற்கும் ஹீரோயினாக்கினார் அர்ஜூன்.படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்த கஜாலா, வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். தினசரிபடப்பிடிப்புக்கு கால தாமதமாகத்தான் வருவாராம். காலையில் எத்தனை மணிக்கு ஷூட்டிங் வைத்தாலும், அவர் வரும் நேரம்10 மணியைத் தாண்டித்தானாம்.கஜாலாவின் இந்த டிலேக்கு என்ன காரணம் என்று அர்ஜூன் ஆராய்ந்தபோதுதான் அம்மணியின் உற்சாக பான மோகம் தெரியவந்தது. தினசரி படப்பிடிப்பை முடித்து விட்டுச் செல்லும் கஜாலா நேராக ஏதாவது ஒரு கிளப்புக்குப் போய் விடுவாராம். அங்குஅவரும், நண்பர்களும் சேர்ந்து ரொம்ப நேரம் உற்சாகமாக இருப்பார்களாம்.மப்பு தலைக்கு ஏறியதும், நள்ளிரவைத் தாண்டிய பிறகுதான் ஹோட்டலுக்குத் திரும்புவாராம் கஜாலா. உள்ளே போன உற்சாகபான போதை தெளிந்து எழ காலை வெகு நேரமாகி விடுமாம். ஹேங்ஓவர் முடிந்த பிறகுதான் ஷூட்டிங் குறித்தே ஞாபகத்திற்குவருமாம் கஜாலாவுக்கு.இப்படியாக அவர் தினசரி லேட்டாக வந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடித்த அர்ஜூன் ஒரு நாள் கூப்பிட்டு சரியான டோஸ்விட்டுள்ளார். இப்படியே வந்தால் படத்திலிருந்து தூக்கிவிடுவேன் என்று எச்சரிக்கவே அன்று முதல் மீதமுள்ள அத்தனைநாட்களிலும் சரியான நேரத்திற்கு வந்து போயுள்ளார் கஜாலா.டைமுக்கு வந்து நடித்துக் கொடுத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது, இப்பெல்லாம் டப்பு, மப்பு, எஸ்கேப்புதான்.இந்தப் படத்திலும் அர்ஜூனுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் உண்டு. ஒருவர் கஜாலா, இன்னொருவர் வேதிகா. அழகு பொம்மைமாதிரி இருக்கும் வேதிகாவும் கஜாலாவும் ஆந்திர தேசத்தவர்கள்.இருவரும் படத்தில் கிளாமரில் முட்டி மோதியுள்ளார்களாம்.

By Staff

மதராஸி படத்தை முடிப்பதற்குள் கஜாலாவால் பெரும்பாடு பட்டு விட்டாராம் அர்ஜூன்.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதராஸி. பெரும்பாலான போர்ஷன்களை முடித்து விட்ட அர்ஜூன், ஹீரோயின்கஜாலாவால் நொம்பலப்பட்டுப் போனதை சொல்லி சொல்லி மாய்கிறார்கள் யூனிட்டார்.

ஏற்கனவே அர்ஜூனுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்தான் கஜாலா. அவருடன் நடித்தபோதுதான் காதல் தோல்வியால்தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கஜாலாவுடன் முந்தைய படத்தில் நடித்த அனுபவத்தை வைத்துஅவரையே தனது மதராஸி படத்திற்கும் ஹீரோயினாக்கினார் அர்ஜூன்.

படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்த கஜாலா, வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். தினசரிபடப்பிடிப்புக்கு கால தாமதமாகத்தான் வருவாராம். காலையில் எத்தனை மணிக்கு ஷூட்டிங் வைத்தாலும், அவர் வரும் நேரம்10 மணியைத் தாண்டித்தானாம்.


கஜாலாவின் இந்த டிலேக்கு என்ன காரணம் என்று அர்ஜூன் ஆராய்ந்தபோதுதான் அம்மணியின் உற்சாக பான மோகம் தெரியவந்தது. தினசரி படப்பிடிப்பை முடித்து விட்டுச் செல்லும் கஜாலா நேராக ஏதாவது ஒரு கிளப்புக்குப் போய் விடுவாராம். அங்குஅவரும், நண்பர்களும் சேர்ந்து ரொம்ப நேரம் உற்சாகமாக இருப்பார்களாம்.

மப்பு தலைக்கு ஏறியதும், நள்ளிரவைத் தாண்டிய பிறகுதான் ஹோட்டலுக்குத் திரும்புவாராம் கஜாலா. உள்ளே போன உற்சாகபான போதை தெளிந்து எழ காலை வெகு நேரமாகி விடுமாம். ஹேங்ஓவர் முடிந்த பிறகுதான் ஷூட்டிங் குறித்தே ஞாபகத்திற்குவருமாம் கஜாலாவுக்கு.

இப்படியாக அவர் தினசரி லேட்டாக வந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடித்த அர்ஜூன் ஒரு நாள் கூப்பிட்டு சரியான டோஸ்விட்டுள்ளார். இப்படியே வந்தால் படத்திலிருந்து தூக்கிவிடுவேன் என்று எச்சரிக்கவே அன்று முதல் மீதமுள்ள அத்தனைநாட்களிலும் சரியான நேரத்திற்கு வந்து போயுள்ளார் கஜாலா.


டைமுக்கு வந்து நடித்துக் கொடுத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது, இப்பெல்லாம் டப்பு, மப்பு, எஸ்கேப்புதான்.

இந்தப் படத்திலும் அர்ஜூனுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் உண்டு. ஒருவர் கஜாலா, இன்னொருவர் வேதிகா. அழகு பொம்மைமாதிரி இருக்கும் வேதிகாவும் கஜாலாவும் ஆந்திர தேசத்தவர்கள்.

இருவரும் படத்தில் கிளாமரில் முட்டி மோதியுள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X