»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil
  • சரிகா நிரந்தரமாக மும்பைக்குப் போய் விட்டார். கமலும், சிம்ரனும் வெளிப்படையாக கைகோர்த்து வலம் வர ஆரம்பித்து விட்டார்கள். மகள்கள் ஸ்ருதியும், அக்ஷயாவும் அம்மாவுடன் மும்பைக்குப் போய் விட்டார்கள். சென்னை வந்தால் வீட்டில் தங்குகிறார்கள். ஆனால் அப்பா மட்டும் ஹோட்டலில்தான் தங்குகிறார். கொஞ்ச நாட்களாகவே கமல் தனது வீட்டுப் பக்கம் வருவதில்லை.
  • ஏற்கனவே மோதலில் உள்ள பார்த்திபன்-சீதாவும் விரைவில் டைவர்ஸ் செய்யப் போகிறார்கள். தனித்தனியே வசித்து வரும் இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக கோர்ட்டை நாடவுள்ளார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. பார்த்திபனுக்கும், பிரபல கர்நாடக இசைப் பாடகி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு வேறு ரூட்டில் போகத் தொடங்கியுள்ளதாம். இதனால் கர்நாடகத்தின் வீட்டில் காவிரிப் பிரச்சினையை விட பெரும் பிரச்சினை எழுந்துள்ளதாம்.
  • விரைவில் ராமராஜனுடன் மீண்டும் சேர்ந்து விடுவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடமெல்லாம் சந்தோஷத்துடன் கூறி வருகிறாராம் நளினி. அட!
  • பானுப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவருடன் லாஸ் ஏன்ஜென்ஸ்சில் வசித்து வருகிறார் பானு.
Please Wait while comments are loading...