"கிசு கிசு" கார்னர்

By Staff

நடிகர் கமல்ஹாசனும் நடிகை சிம்ரனும் திடீரென்று திருச்சிக்கு வந்ததால் பல்வேறு வதந்திகள் பரவின.

சிம்ரனுடான தனது நட்பு குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ள கமல், சமீப காலமாக எங்கு சென்றாலும் சிம்ரனுடன்தான் சேர்ந்து செல்கிறார்.

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பான்யன் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த கலை நிகழ்ச்சியின் முடிவில் சிம்ரனுடன் தனது காரில் திருச்சிநோக்கிப் பயணமானார் கமல்.

கார் டிரைவர் தவிர வேலைக்காரப் பெண் மட்டுமே அவர்களுடன் இருந்தார்.

திருச்சியில் உள்ள ராஜாளி ஹோட்டலுக்கு வந்த அவர்களைப் பார்த்ததும், ஹோட்டல் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

திடீரென்று கமல், சிம்ரனைப் பார்த்ததால் ரசிகர்களும் கூடி விட்டனர். இதையடுத்து ஹோட்டலின் பின்புற வழியாக இருவரும் வேக வேகமாக உள்ளேசென்று விட்டனர்.

திருச்சியில் கமலின் அண்ணன் சந்திரஹாசனின் வீடு உள்ளது. கமல், தனது அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

அப்படியே இருந்தாலும் சிம்ரனுடன் வந்திருந்த காரணம் குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பியுள்ளன. ஒருவேளை சிம்ரனை தனது அண்ணன் வீட்டினருக்குஅறிமுகப்படுத்துவதற்காக கமல் கூட்டி வந்திருக்கலாம் என்றும் பேச்சு நிலவியது.

மறுநாள் காலை சிம்ரன் தனியே கும்பகோணம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடக்கும் "அரசு" படப்பிடிப்பில் கலந்து கொள்ள செல்வதாகக் கூறப்பட்டது.பின்னர் கமலும் புறப்பட்டார். அவர் சென்னை திரும்பிவிட்டதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X