»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

ஞாபகமிருக்கிறதா, நடிகை கனகாவை? கரகாட்டக்காரன் என்ற மெகா ஹிட் படத்தில் நடித்தாரே.

கதாநாயகி வாய்ப்புகள் பறிபோன பின்பு விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கவும் செய்தார்.

சமீபத்தில் அவரது தாயார் தேவிகா இறந்துபோய்விட தனது பெரிய பங்களாவை விற்றுவிட்டார். தந்தையோ, உடன் பிறந்தவர்களோ யாரும் இல்லாததால் தனிமையில் வாடி வந்தார்.

சினிமாவில் இனியும் சான்ஸ் கிடைக்காது என்பதால் டிவியில் முயற்சித்துக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் தெலுங்குப் பட ஒளிப்பதிவாளர் ஒருவரைக் காதலித்து, ரகசியத் திருமணம் செய்து கொண்டுவிட்டார்கனரகா என்று கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.

சென்னைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஹைதராபாத்திலேயே கனகா நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார்என்கிறார்கள்.

தயாரிப்பாளரை நோகடிக்கும் சதா

ஜெயம் பட வெற்றிக்குப் பின் நடிகை சதா வர்ணஜாலம் என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

மும்பையைச் சேர்ந்த இவர் சென்னை தி.நகரிலுள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில்தான்தங்குவேன் என்று அடம் பிடிகிகிறார்.

அந்த ஹோட்டலில் ஒரு நாள் ரூம் வாடகை மட்டும் ரூ.6.000. கூடவே அப்பாவும் இருக்கிறார்.

இருவருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மற்றும் இதர செலவுகளைச் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.10,000வரை செலவாகிறதாம்.

தலையில் அடித்துக் கொள்கிறார் தயாரிப்பாளர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil