ஹரிக்குமாருக்கு கரண் அட்வைஸ்

By Staff

திருத்தம் மூலம் திரை ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஹரிக்குமாருக்கு, கரண் நிறைய அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

Click here for more images

டான்ஸ் மாஸ்டராக பலரையும் ஆட வைத்தவர் ஹரிக்குமார். திடீரென அவருக்கும் ஹீரோ ஆசை வர, தூத்துக்குடி மூலம் நடிகரானார். முதல் படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைத்த ஹரிக்குமார் நடிப்பில் சமீபத்தில் திருத்தம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது.

முதல் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிய ஹரிக்குமார், திருத்தத்தில் வித்தியாசமான வேடத்தில் புகுந்து விளையாடியுள்ளார். படத்தில் எத்துப் பல்லுடன் அவர் நடித்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திருத்தம் வெளியான பின்னர் நடிகர் கரண், ஹரிக்குமாரை பார்த்து நன்றாக நடித்துள்ளீர்கள் என்று கூறிப் பாராட்டி, வாழ்த்தினாராம். அத்தோடு இல்லாமல் பல அட்வைஸ்களையும் அள்ளி வழங்கியுள்ளாராம்.

நான் பல படங்களில் குணச்சித்திர வேடம், வில்லன், ஹீரோவுக்குத் தோழன் என பல விதமாக நடித்தேன். ஹீரோவாக நடிக்க முடிவு செய்தபோது, என்னுடன் நெருக்கமாக இருந்த பல ஹீரோக்கள் எனக்கு எதிராக திரும்பினர். நான் வளர்ந்து விடக் கூடாது என்று பல குழப்பங்களை ஏற்படுத்தினர்.

ஆனால் அதையெல்லாம் மீறி நான் ஹீரோவாகி வெற்றியும் பெற்றுள்ளேன். உங்களுக்கும் இதுபோல சிலர் தடைகளை ஏற்படுத்தலாம். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடியுங்கள் என்று அட்வைஸ் செய்தாராம்.

மேலும் ஒரு குறிப்பிட்ட நடிகரைச் சொல்லி, அவருடன் மட்டும் எந்தக் காலத்திலும் நெருக்கமாக பழகி விடாதீர்கள். அவர் நம் மீது அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொண்டு சைடிலேயே குழி பறித்து விடுவார் என்று ஹரிக்குமாரை எச்சரித்து விட்டுப் போயுள்ளாராம்.

சக நடிகரான கரண், தன்னை வாயாரப் பாராட்டி, அட்வைஸும் கொடுத்ததால் குளிர்ந்து போயுள்ளாராம் ஹரிக்குமார்.

சக ஹீரோவைப் பாராட்ட ஒரு மனம் வேண்டும். அது கரணுக்கு உள்ளது. அதற்காக நாமும் அவரைப் பாராட்டுவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X