வெளியில பார்க்க பெரிய மனுஷன் மாதிரி இருப்பான்.. கண்ட இடத்துல கை போகும்.. மோசமான மியூசிக்?
சென்னை: சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் ஆடியோ லான்ச் உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் புத்தருக்கே நாங்க தான் ஆசையை மறக்க கற்றுக்கொடுத்தோம் என்பது போல தெய்வீகத் தன்மையுடன் காட்சியளிப்பார்கள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டிலும், ஸ்டூடியோவிலும், பார்ட்டி பண்ணும் இடங்களிலும் அவர்கள் செய்யும் சேட்டையே அசிங்கத்தின் உச்சமாக இருக்கும் என மியூசிக் டைரக்டர் ஒருவர் பற்றி பிரபலம் பேசியிருப்பது பகீரை கிளப்பி உள்ளது.
ஹீரோயினாக படத்தில் கமிட் ஆக, சீரியலில் நடிக்க பக்கத்து ஸ்டேட்டில் இருந்து வரும் பெண்களிடம், கமிட்மெண்ட், அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் என ஆரம்பித்து பல மோசமான ஆபாச உலகத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டு குடியும் கூத்துமாகத்தான் சில சினிமா பிரபலங்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.

அதிலும், அந்த மியூசிக் பார்க்க அப்படியே வெளியில பெரிய மனுஷன் போர்வையில் ஒளிந்துக் கொண்டு பாட வரும் பாடகிகள், படத்தில் நடிக்கும் நடிகைகள் வரை பலரை பதம் பார்த்து விட்டார் எனக் கிளம்பியுள்ள கிசுகிசுக்கள் நெஞ்சை பதற வைக்கின்றன.
பாத்ரூமில் ரகசிய கேமரா: அந்த இசையமைப்பாளர் ஒரு கேடுகெட்ட பொம்பள பொறுக்கி என்றும் ஆபாசவாதி என பிரபலம் ஒருவர் சமீபத்தில் பேசிய பேட்டி வைரலாகி வரும் நிலையில், தனது ஸ்டூடியோவுக்கு பாட வரும் பாடகிகள் பயன்படுத்தும் ரெஸ்ட் ரூமில் கூட ரகசிய கேமரா வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்து கன்றாவி காட்சிகளை பார்த்து தனது கொடூர புத்தியை காட்டியவர் என்கின்றனர்.
நடிகர்களை விட மோசம்: சினிமா நடிகர்கள் சிலர் தான் இதுபோன்ற ஆபாச ஆட்டங்களை அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கும் திமிர் காரணமாக மனைவியை ஏமாற்றிவிட்டு நடிகைகளுடன் கூத்தடிப்பது உள்ளிட்ட விஷயங்களை பண்றாங்கன்னு பார்த்தால், அவர்களை விட மோசமாக அந்த மியூசிக் எல்லை மீறி பல பாடகிகளிடம் தவறாக நடந்துக் கொண்டார் என்றும் எப்ஸ்டீன் ஃபைல்ஸை விட அவனோட ஆட்டம் அதிகம் என்றும் சீக்கிரமே அம்பலப்பட்டு அசிங்கப்படுவான் என அந்த பிரபலம் சாபமிட்டுள்ளார்.
தூக்கமே போச்சு: பிரபலத்தின் பேட்டிக்குப் பிறகு அந்த பிரபலம் அதிகளவில் எந்த மியூசிக்கிடம் பணியாற்றினார் என்கிற லிஸ்ட்டையும் யார் அந்த பாடகியை பொதுவெளியில் கூட டார்ச்சர் செய்தது என்று பார்த்தால் அந்த மியூசிக்கா என பலரும் குறிப்பிட்ட அந்த நபரை அசிங்கமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால், சம்பந்தப்பட்ட மியூசிக்கிற்கு தூக்கமே போச்சு என்கின்றனர். அவரது குடும்பத்தினரும் சந்தேக பார்வையை வீச ஆரம்பித்து விட்டார்களாம். சபலம் ஒரு மனுஷனை சாக்கடையாக மாற்றிவிடும் என்பதற்கு பலி கடாவாக அந்த மியூசிக்கும் மாறிவிட்டார் என்றும் சீக்கிரமே பெயர் அம்பலப்படும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications