»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் ரசிகர்களை தூங்க விடாமல் தவிக்க விட்ட கஸ்தூரி அதற்குப் பிறகு ஆளையே காணோம்.

அவரைப் பற்றி கல்யாண வதந்தி ஒன்று சில மாதங்களுக்கு முன் வந்தது. ஆனால் வந்த வேகத்திலேயே அது புஸ் என்று ஆகி விட்டது. அதற்குப் பிறகுகஸ்தூரி என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் என்றே பலருக்கும் தெரியவில்லை.

இப்போது கஸ்தூரி மீண்டும் அடிபடுகிறார்- செய்திகளில்தான்.

அமெரிக்காவில் உள்ள ஒரு டாக்டரை நாடி பார்த்து வருகிறாராம் கஸ்தூரி. விரைவில் அவர்களுக்கு டும் டும்.

சுற்றுலாவுக்காக கஸ்தூரி அமெரிக்கா போயிருந்தபோதுதான் இந்த காதல் வைரஸ் இருவரையும் தாக்கியதாம். இதனால் இருவருமே மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளனராம். எனவே அது முற்றுவதற்குள் மூன்று முடிச்சுப் போட்டு விட டாக்டர் முடிவு செய்துள்ளாராம்.

விரைவில் மாங்கல்யம் தந்துனானேனா ..

Read more about: actress, cinema, film, heroin, heros, kasturi, movies, songs
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos