»   »  கீர்த்தியின் காதல்!

கீர்த்தியின் காதல்!

Subscribe to Oneindia Tamil

பாக்யராஜின் மகன் சாந்தனுவுக்கும், கீர்த்தி சாவ்லாவுக்கும் இடையே காதல் பூத்து, நெருக்கம் அதிகமாகிவருகிறதாம். இயக்குநரின் குடும்பம் இதை பெரும் கவலையோடு கவனித்துக் கொண்டுள்ளதாம்.

பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியின் மகள் நடிகையாகி விட்டார். அப்பாவின் இயக்கத்தில் முதல் படத்தை முடித்துவிட்ட அவர் இப்போது மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அடுத்த வாரிசான மகன் சாந்தனுவையும் நடிகராக்க பாக்யராஜ், ஆயத்தமாகி வருகிறார். முதலில் சாந்தனுதான்நடிகராயிருப்பார். ஆனால் அதில் கொஞ்சம் தாமதமாகவே மகள் முதலில் நடிகையாகி விட்டார். விரைவில்சாந்தனுவை தனது இயக்கத்திலேயே நடிகராக்க திட்டமிட்டுள்ளார் பாக்யா.

இப்போது மேட்டர் என்னவென்றால் சாந்தனுவும், நடிகை கீர்த்தி சாவ்லாவும் படு நெருக்கமாக பழகவருகிறார்களாம். இதனால் பாக்யராஜும், பூர்ணிமாவும் கவலையில் மூழ்கியுள்ளனராம்.

பூர்ணிமாதான் அதிக கவலையுடன் இருக்கிறாராம். சாந்தனுவிடம் இதுகுறித்து கேட்டால், நாங்கள் சாதாரணநண்பர்கள் தான். எங்களை சந்தேகப்பட வேண்டாம் என்று கூறுகிறாராம் சாந்தனு. ஆனால் பாக்யராஜ் தனதுமகனிடம் இந்த விஷயம் குறித்து இதுவரை பேசவில்லையாம். மாறாக பல்வேறு வழிகளில் தனது மகனை வாட்ச்செய்து வருகிறாராம்.

சாந்தனு இப்படிச் சொன்னாலும் கூட, அவரும், கீர்த்தியும் பழகுவதைப் பார்த்தால், காதல் முற்றி வருவதாகத்தெரிகிறது என கோலிவுட்டில் டாக் உலவுகிறது. மகனின் போக்கால், கவலை அடைந்துள்ள பாக்யராஜ் குடும்பம்,இந்தப் பிரச்சினை எப்படி சமாளிப்பது என குழப்பமாக உள்ளதாம்.

சாந்தனு இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் கிசுகிசுவில் சிக்கி விட்டார். அடுத்து என்னென்னபரபரப்பு கொடுக்கப் போகிறாரோ!

Read more about: baghyarajs son in love

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil