»   »  சின்னப்பையன் சார் அவன்... "சைலண்ட்" டைரக்டருக்கு ஒரே வார்த்தையில் நோ சொன்ன ஹீரோ!

சின்னப்பையன் சார் அவன்... "சைலண்ட்" டைரக்டருக்கு ஒரே வார்த்தையில் நோ சொன்ன ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழா, இந்தியா என்பது இன்னும் உறுதியாகவில்லை, ஆனால் விரைவில் புதிய படம் இயக்க இருக்கிறார் சைலண்ட் மியூசிக் இயக்குநர்.

தனது கடைசி படத்தில் லிவிங் டுகெதர் பற்றி வித்தியாசமாக சொல்லி, சர்ச்சையில் சிக்கிய இயக்குநரின் அடுத்தபடமும் இளைஞர்கள் பற்றியது தானாம். இப்படத்தில் கிங் நடிகரின் மகனை அறிமுகப் படுத்ததால் என நினைத்தாராம் இயக்குநர்.

King actor avoids big director

இது தொடர்பாக ராவணனிடமும் அவர் பேசியுள்ளார். ஆனால், நடிகர் என்ன நினைத்தாரோ என்னவோ, ‘சாரி சார், பையன் சின்னப் பையன். இன்னும் கொஞ்சம் அவன் படிக்கட்டும்' எனக் கூறி நாசுக்காக வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

உலக அழகியே தமிழில் அறிமுகமானால் இவர் கையால் தான் என அடம் பிடித்த காலம் போய், கிடைத்த வாய்ப்பையும் நடிகர் மறுப்பதற்குப் பிண்ணனியில் முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

அதாவது, சீ குறித்து தான் எடுத்த படத்தில் ஒரே சமயத்தில் முன்னாள் ஹீரோ மற்றும் ஹீரோயினின் வாரிசுகளை அறிமுகப் படுத்தினார் இயக்குநர். அந்தப் படம் தோல்வியடைந்ததால், இருவருமே ராசியில்லாதவர்கள் ஆனார்கள்.

எனவே, இதே போன்ற நிலைமை தன் மகனுக்கும் வரக்கூடாது என எண்ணுகிறாராம் நடிகர்.

English summary
The king actor refused big director's offer to introduce his son as hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil