»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி நடிகைகள் ஒன்று சேர்ந்து குத்தாட்டம் போட்டால் பார்க்க சந்தோஷமாக இருக்கும். அதுவே அவர்கள் அடிதடியில்இறங்கினால்.. நினைச்சாலே கெறங்குதுல்ல..

சரி, மேட்டருக்கு வருவோம். சீனா தானா புகழ் ரகஸ்யா சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குப்போயுள்ளார். அங்கு கொஞ்சம் போல உற்சாகபானத்தை சாய்த்துக் கொண்டு, அப்படியே லேசாக ஒரு டான்ஸ் போட்டுள்ளார்.

டான்ஸ் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்புறம் ஆடிக் கொண்டிருந்த ஒரு அம்மணி தனது"பின்பக்கத்தால்", ரகஸ்யாவை பலமாக இடித்துள்ளார். எதேச்சையான இடி என்று முதலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட,ரகஸ்யா தொடர்ந்து ஆடியுள்ளார்.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஒரு இடி விழ, கோபத்துடன் திரும்பிப் பார்த்துள்ளார் ரகஸ். ரகஸ்யாவுக்கு இடியைக் கொடுத்தவர்கிரண்.

வேண்டுமென்றே ஏன் இடிக்கிறாய் என்று சண்டைக்குப் போயுள்ளார் ரகஸ்யா. ஆனால் கிரண் அதைக் கண்டுகொள்ளாமல்தொடர்ந்து ரகஸ்யாவை டீஸ் செய்து கொண்டே ஆடியுள்ளார்.

பின்பக்கத்தால் முதலில் இடித்த அவர், தனது "முன்பக்கத்தாலும்" ரகஸ்யாவை இடித்துள்ளார். என்ன பண்ணுவது என்றுதெரியாமல் குழம்பிய ரகஸ்யா அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்து சேர்ந்தார் சங்கவி.

ரகஸ்யாவைப் பார்த்ததும் சங்கவிக்கும் கோபம் பொத்துக் கொண்டது. அவர் தன் பங்குக்கு ரகஸ்யாவின் தோளில் கை வைத்துதள்ளியுள்ளார்.

இரு முனைத் தாக்குதலை எதிர்பார்க்காத ரகஸ்யா, எதற்காக என்னிடம் தேவையில்லாமல் வம்பு செய்கிறீர்கள் என்றுகேட்டுள்ளார். அதற்கு கிரணும், சங்கவியும், சகட்டு மேனிக்கு ரகஸ்யாவை திட்டி அபிஷேகம் செய்துள்ளனர்.

மிரண்டு போன ரகஸ்யா, ஹோட்டல் ஊழியர்களின் உதவி கோர, அவர்கள் உதவியுடன் அங்கிருந்து தப்பியுள்ளார். ரகஸ்யாவைவிரட்டிய சந்தோஷத்தில், சங்கவியும், கிரணும் ஒன்றாக சேர்ந்து உற்சாக பானத்தை உள்ளே தள்ளி விட்டு, கொஞ்ச நேரம்உட்கார்ந்து பேசி விட்டு இடத்தைக் காலி செய்தனராம்.

இந்த இடிதடி சமாச்சாரம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஹீரோயின் வேசம் கலைந்து சிங்கிள் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த தங்களின் பொழப்பில் மண்ணைப் போடும் விதமாக ரகஸ்யாவின் வரவு அமைந்ததால் ஆத்திரமடைந்தகாரணத்தால்தான் இப்படிப் போட்டு இருவரும் தாக்கியதாக சொல்கிறார்கள்.

இது மட்டும் தான் காரணமா அல்லது வேறு விவகாரம் ஏதும் இருக்குமா என கோலிவுட் கோழிகள் விசாரித்துக்கொண்டிருக்கின்றன.

Read more about: kiran, priyamani, ragasya, sangavi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil