இடையழகி நடிகையை நம்பவைத்து ஏமாற்றிய முத்த நடிகர்.. சம்பளத்தை கூட தரலையாம்!

By Staff

சென்னை : இடையழகுக்கு பெயர் போன நடிகையை முத்த நடிகர் ஒருவர் நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார்.

பல டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்த இந்த நடிகைக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தைக்கூட முத்த நடிகர் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த நடிகை மனம் வெறுத்து சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.

Kiss fame actor cheated Hip beauty actress

இடையழகி நடிகை : பாலிவுட்டிலிருந்து வந்த இடையழகி நடிகை அறிமுகமான முதல் படமே நடிப்பு பெயர் பெற்ற நடிகருடன் என்பதால், அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன. அந்த படங்கள் தோல்வி படங்களாகவே இருந்ததால், கிளாமரில் தாராளம் காட்டி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்தார். பிரகாசமான நடிகருடன் இவர் ஜோடி போட்டு நடித்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் இடையழகு நடிகைக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

காத்திருந்த தயாரிப்பாளர் : டாப் நடிகர், மாஸ் நடிகர், டான்ஸ் நடிகர் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். இடையழகியின் கனகச்சிதமான நடிப்பை விட, இவர் கையை தூக்கி, இடுப்பை வளைத்து ஒரு ஆட்டம் போட்டாலே போதும் என்று நினைத்து பல தயாரிப்பாளர்கள் இவரின் கால்ஷூட்டுக்காக காத்திருந்தனர்.

காதல் கிசுகிசு : இதையடுத்து முத்த நடிகருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தார், இந்த படம் கலெக்ஷனை அள்ளியது. இந்த படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கிய, பல ஊர்களுக்கு காதல் புறா போல சுற்றி வந்துள்ளனர். முத்த நடிகர் பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்த போதும் இடையழகி நடிகையோ அவரை பெரிதும் நம்பி மனதை பறிகொடுத்தார்.

Kiss fame actor cheated Hip beauty actress

சம்பளத்தை தரல : இடையழகியின் காதலை பயன்படுத்திக் கொண்ட முத்த நடிகர் தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிகையை நடிக்க வைத்தார். இந்த படம் வெற்றி பெற்ற போது இடையழகி நடிகைக்கு பேசப்பட்ட சம்பளத்தை இதுநாள் வரை அவர் திரும்பி தரவே இல்லையாம். காதலை விட, பணம் முக்கியமா என நினைத்த நடிகை அந்த பணத்தை பற்றி பேசாமலே இருந்துள்ளார். ஆனால், முத்த நடிகரோ ஒரு கட்டத்தில் அந்த நடிகைக்கு டாடா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.

விரக்தியில் நடிகை : இதனால், விரக்தியில் இருந்த அந்த நடிகை கண்ணீரும் கம்பளியுமாக சொந்த ஊருக்கே மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சென்றுள்ளார். அதன் பின் வந்த வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு வீட்டில் பார்த்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரிலேயே செட்டிலாகி விட்டார்.

More from Filmibeat

Read more about: gossip காசிப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X