»   »  வெளியானது நாலு படம்... ஒண்ணும் பெரிசா தேறல... ஒல்லி மனசுல கிலி!

வெளியானது நாலு படம்... ஒண்ணும் பெரிசா தேறல... ஒல்லி மனசுல கிலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு ஒல்லிப் பார்ட்டிக்கு நான்கு படங்கள் வெளியாகின. நான்கிலுமே டாப் டெக்னீஷியன்கள்தான்.

ஆனால் டங்காமாரி பாட்டு வந்த படம் மட்டும் முதலுக்கு மோசமில்லாமல் போனது. மற்ற படங்கள் அவுட்.

நல்ல பாடல்கள், இசை, பெரிய நடிகரின் துணை எல்லாம் இருந்தும் அந்த இந்திப் படமும் புட்டுக் கொண்டது.

Kokki Kumaru disturbs his director

அதிலும் பேருக்கு ஒருவரை டைரக்டராகப் போட்டு இவரே இயக்கிய கோல்ட்சன் படுதோல்வியைத் தழுவ, ஒல்லி படு அப்செட்.

இப்போது அடுத்த படத்திலாவது வெற்றியை ருசித்துவிடத் துடிக்கும் ஒல்லித் தம்பி, அந்தப் பட இயக்குநரிடம் கொஞ்சம் தன் டைரக்ஷன் தெறமையைக் காட்ட முயன்றிருக்கிறார். அந்த இயக்குநரே ஒரு ஜெகஜ்ஜால கில்லாடி, படம் எடுப்பதிலும் சரி, எடுக்கும்போதே கணிசமாக சுருட்டுவதிலும் சரி!

ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாதல்லவா... வேகமாக வளர்ந்த படம் இப்போது ஸ்பீட் பிரேக்கரில் முட்டிக் கொண்டு நிற்கிறதாம்!

English summary
Kokki Kumaru actor is in upset mood due to his recent flops. Now he is trying to make his next as a big hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil