உங்களை பார்க்க நாங்க வரல அப்பா.. நடிகரிடம் புலம்பிய மகன்கள்.. புதுசாக வந்திருக்கும் பெண் செம டார்ச்சராம்

By S

சென்னை: கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அவருக்கு; இடையில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தால் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். ஆரம்பத்தில் அந்தப் பெண்ணுடன் நல்ல புரிதலில்தான் உறவு சென்றுகொண்டிருந்ததாம். இப்போது பெற்ற மகன்களையே பார்க்கக்கூடாது என திட்டவட்டமாக அப்பெண் சொல்ல ஆரம்பித்துவிட்டாராம். இது புது பேச்சுபொருளாக கோலிவுட்டில் எழுந்திருக்கிறது.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்த நடிகர்; தான் உண்டு, தனது வேலையுண்டு என்று இருந்தவர். பிள்ளைனா அப்படி ஒரு ஆண் பிள்ளை இருக்கணும் என பலரும் புகழ்ந்தார்கள். கரியர் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோதே ஒரு பெண்ணை காதலித்து; வீட்டில் ஒருவழியாக சம்மதம் வாங்கி திருமணம் செய்தார். அந்தத் திருமணத்துக்கு மலரான நடிகைதான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Kollywood Actor s Relationship Sparks Fresh Controversy as New Partner Objects to Meeting His Sons

பிரிந்த நடிகர்: திருமணத்துக்கு பிறகு இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள் அந்தத் தம்பதி. நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது அவர்களது வாழ்க்கை. அதேசமயம் மனைவியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் நிலைமை நடிகருக்கு உண்டானது. இதை ரொம்ப நாட்கள் வெளியே சொல்லாமல் சமாளித்துவந்தார். ஒருகட்டத்தில் இனிமேலும் ஒத்துவராது என்று முடிவெடுத்து; மனைவியை பிரிவதாக அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார். அப்போதிருந்து அந்த நடிகரை சுற்றி சர்ச்சைகள் அதிகம் எழுந்துவருகின்றன.

பெண்ணுடன் பழக்கம்: இந்த பிரிவுக்கு முழுக்க முழுக்க நடிகரின் மனைவியைத்தான் பலரும் ஃப்ரேம் செய்தார்கள். ஆனால் காரணம் அது இல்லை; இன்னொரு பெண்ணுடன் நடிகருக்கு ஏற்பட்ட பழக்கம்தான் காரணம் என்பது தெரியவந்தது. முதலில் இதனை திட்டவட்டமாக மறுத்தார் நடிகர். ஆனால் காலப்போக்கில் அது உறுதியாகிவிட்டது. தெரிந்துதான்விட்டதே என்று அவரும் அந்தப் பெண்ணை ஜோடியாக பல இடங்களுக்கு அழைத்துவருகிறார்.

விவகாரமான பெண்: அப்பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில்கூட நடிகரோடு படம் பார்க்க வந்தார். வந்தவர் சும்மா இல்லாமல் நடிகரை புகழ்கிறேன் என்கிற பெயரில் எதையோ பேசிவைக்க; படத்தின் ஹீரோ காண்டாகிவிட்டார் என்றும் ஒரு பேச்சு கிளம்பியது நினைவுகூரத்தக்கது. நடிகருடன் அவர் சேர்ந்திருப்பது நடிகருக்குத்தான் பல வழிகளில் பிரச்னை எனவும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

என்ன பிரச்னை?: ஆரம்பத்தில் நடிகரின் பல விஷயங்களில் தலையிடாமல்தான் இருந்தாராம். நெருக்கம் அதிகமாக அதிகமாக நடிகரின் சம்பள விவகாரத்தையும் இவரே கவனிக்க ஆரம்பித்திருக்கிறாராம். இதை இப்படியே விட்டால் முதல் திருமண வாழ்க்கையில் நடந்தது நடந்துவிடும் என அஞ்சி; அதெல்லாம் வேண்டாம் என்று நடிகர் தடுத்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை வீட்டுக்கு வரவழைப்பது, அவர்களை சந்திப்பது போன்ற பழக்கங்களையும் வைத்திருந்திருக்கிறார் நடிகர். ஆனால் அம்மணியோ அதற்கும் நோ சொல்லிவிட்டாராம். பிள்ளைகள் வீட்டுக்கு வந்தாலே கடித்து கடித்து துப்புகிறாராம். இதனால் இனிமேல் நாங்கள் உங்களை சந்திக்க வரவில்லை என மகன்கள் ஃபீல் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதாம். இதனை பார்த்த திரைத்துறையில் இருப்பவர்களோ, கூடாத சகவாசம் எப்படியெல்லாம் படுத்துது என புலம்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X