தமிழ்நாட்டை அதிரவிடப்போகும் நடிகை.. முதல் காதலர் அந்த பெரிய புள்ளியாம்.. பூகம்பம் உறுதி!
சென்னை: கோலிவுட்டில் பல வருடங்களாக நடித்துவருபவர் அந்த நடிகை. நடிப்பை தாண்டி சர்ச்சையின் மூலம்தான் நிறைய அடையாளப்பட்டார். நிறைய திருமணங்களை செய்த அவர்; ஒன்றுகூட செட் ஆகாததால் அவர் ஒட்டுமொத்தமாக அதிலிருந்து வெளியே வந்து இப்போது சிங்கிளாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் முதலில் காதலித்த நபர் குறித்துதான் கோடம்பாக்கம் முழுதும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
பிரபல நடிகருடைய மகள்தான் அந்த மூன்றெழுத்து நடிகை. அந்த நடிகை மீது மூத்த நடிகர் பெரிய பாசத்தை வைத்திருந்தார். அதனால்தான் தன்னுடைய குடும்பத்திலிருந்து தனக்கு பிறகு சினிமாவில் அவரை முதலில் அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே இப்போதைய டாப் ஹீரோ ஒருவருக்குதான் ஜோடி சேர்ந்தார். அந்தப் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவருக்கு அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லை.

திருமணம் செய்துகொண்ட நடிகை: திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலேயே ஒருவரை திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டார். சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தார்கள். பிறகு பிரிந்துவிட்டார்கள். அந்தத் திருமண தோல்விக்கு பிறகு மேலும் சில திருமணங்களை செய்துகொண்டார். ஆனால் அதுவும் செட் ஆகவில்லை. அவர் திருமண விஷயத்தில் எடுத்த முடிவுகளும், சொத்து பிரச்னைகளும் சேர்ந்துகொண்டு குடும்பத்திலிருந்து நடிகையை பிரித்துவிட்டது.
முற்றிய பிரச்னை: அந்த சமயத்தில் எல்லாம் தன் தந்தை, சகோதரிகள், சகோதரர் குறித்தெல்லாம் சகட்டுமேனிக்கு செய்தியாளர்களிடம் பேசுவார். ஒருகட்டத்தில் இப்படியே விட்டால் இந்தப் பிரச்னையால் மூத்த நடிகரின் பெயரும், அவரது குடும்ப மானமும் சந்தி சிரித்துவிடும் என்பதால்; உச்ச நடிகர் ஒருவரும் உள்ளே வந்து பஞ்சாயத்து செய்து பார்த்தார்.ம்ஹூம் ஒரு பலனும் அளிக்கவில்லை. நடிகை மட்டும் கொஞ்சம் அடக்கி வாசித்தார். குடும்பத்தோடு சேர முடியவில்லை.
பகீர் கிளப்பிய நடிகை: சூழல் இப்படி இருக்க அவரது முதல் காதலர் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. அவரேகூட, 'நான் உண்மையை சொன்னால் அவ்வளவுதான்' என்று பொடி வைத்து பேசியிருந்தார். இதனால் பலரும், யார் அந்த காதலராக இருப்பார் என்ற தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இந்நிலையில் அந்த நடிகர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
யார் அவர்?: அதாவது அந்த நடிகை காதலித்த நபர் இப்போது தமிழ்நாட்டில் முக்கியமான விவிஐபியாம். ஒட்டுமொத்த மாநிலத்தையும் தன்னுடைய தரமான செய்கையால் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியவர். நடிகையுடன் ஏற்பட்ட பழக்கம் தொடக்கத்தில் தீவிரமான காதலாக இருந்ததாம். அப்போதே காஸ்ட்லி கிஃப்ட்டுகளை எல்லாம் இரண்டு பேரும் பரிமாறிக்கொள்வார்களாம்.
ஆனால் அந்த நபர் இன்னும் வளர வேண்டும்; அதற்கு இந்தக் காதல் தடையாக இருக்கக்கூடாது என அவரை சுற்றியிருப்பவர்கள் சொல்ல; கொஞ்சம் கொஞ்சமாக கரியரில் கவனம் செலுத்தி நடிகையை கழற்றிவிட்டுவிட்டாராம். இந்த அம்மணியும் எவ்வளவோ முயன்று பார்த்தாராம். ஆனால் நாளுக்கு நாள் அந்த நபரின் வளர்ச்சி அதிகரிக்க; அவர் பக்கத்தில்கூட நடிகையால் நெருங்க முடியவில்லையாம். அதனையடுத்துதான் அந்தக் காதலிலிருந்து நடிகை வெளியே வந்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications
