வாயை கொடுத்து வம்பை வாங்கும் கணவர்.. வீட்டுக்குள் நடிகை சரியான கும்மாங்குத்தாம்.. ஒரே ரகளையாம்

By Staff

சென்னை: கோலிவுட்டில் ஹோம்லி கேரக்டர்களில் நடித்து பெயர் பெற்ற அந்த நடிகை தன்னை வைத்து படம் எடுத்தவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிகை உழைக்க; கணவரோ மார்க்கெட் இல்லாமல் வீட்டிலேயே அமர்ந்துவிட்டார். இத்தனை வருடங்கள் பேசுபொருளாகாத கணவர் சமீப நாட்களாக வாயை கொடுத்து வம்பை வாங்குவதால் நடிகை செம காண்டில் இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் கிளாமர் ரோல்களில் நடிக்காமல் நடித்தால் ஹோம்லி ரோல்கள்தான் என்று சபதமெடுத்து நடித்தவர் நான்கெழுத்து நடிகை. முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் கோலோச்சி கெத்து காண்பித்துக்கொண்டிருந்தார் தன்னுடைய கரியரில்.

ஆச்சரியம் ஏற்படுத்திய நடிகை: நடிகை என்றாலே கிளாமர் ரோல்கள் செய்ய வேண்டும்; அப்போதுதான் திரைத்துறையில் நீடிக்க முடியும் என்ற விதி இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்த நடிகையோ அந்த விதியை எல்லாம் உடைத்து குடும்ப பாங்கான ரோலை ஏற்றாலும் பல வருடங்கள் பெயர் சொல்லும்படியான ஹீரோயினாக ஜொலிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டினார். அதை பார்த்து ஒட்டுமொத்த திரைத்துறையின்ரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.

Kollywood Actress in Trouble as Husband s Controversial Interviews Go Viral

இயக்குநருடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க லா லா லா இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு படம் இயக்கிய மன்னர் இயக்குநரை காதலித்த நடிகை அவரையே திருமணம் செய்துகொண்டு செட்டிலும் ஆனார். நடிகை இருக்கும் அழகுக்கும், அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கும் ஒன்றிரண்டு படங்களை மட்டுமே இயக்கியவரை திருமணம் செய்து வியப்பைத்தான் ஏற்படுத்தினார்.

வாயை கொடுக்கும் கணவர்: ஏற்கனவே பெரிதாக மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த கணவர்; நடிகையை திருமணம் செய்து முடித்த பின்பு வீட்டிலேயே இருக்கிறார். நடிகை சேர்த்த பணத்தில் தோட்டம், வீடு என்று நிம்மதியாக வாழ்க்கையை போக்கிக்கொண்டிருந்த அவர்; சமீப காலமாக பேட்டிகள் கொடுப்பதை அதிகமாக்கியிருக்கிறார். அப்படி பேட்டிகள் கொடுக்கும்போது இஷ்டத்துக்கு பேசியும்விடுகிறார். அப்படி ஒரு லெஜண்ட் இயக்குநரை பற்றி பேசியிருப்பது விமர்சனத்தை கிளப்பியது.

வீட்டுக்குள் கும்மாங்குத்து: அவர் அப்படி பேசியதை வைத்து சகட்டுமேனிக்கு அடித்துவருகிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமின்றி நடிகையை தொடர்புகொண்டு திரைத்துறையை சேர்ந்த நண்பர்களும், 'அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. எல்லோரும் மதிக்கும் இயக்குநரை இப்படியா பேசுவாது' என்று கூறினார்களா. இதனால் செம டென்ஷனான நடிகை, 'உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. தோட்டத்தையும் வீட்டையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே' என சொல்ல; இயக்குநரும் பதிலுக்கு ஏதோ பேசினாராம். உடனே டென்ஷனான நடிகையோ பலமாக டோஸ் விட்டு; இனி வாயையே திறக்கக்கூடாது என்று கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X