ஊரே சிரிக்குது.. இப்படி ஒரு சக்சஸ் யார் கேட்டா? குரல் வித்தை இயக்குநர் மீது கடுப்பில் பிரைட் நடிகர் & கோ
சென்னை: இந்த நடிகர் தியேட்டரில் சக்சஸைப் பார்த்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் படம் வெளியாகும் போது எல்லாம், இந்த படம் பிளாக் பஸ்டர், இந்த படம் 1000 கோடி வசூல் என்று சொல்லி பில்டப் கொடுத்து புண்ணாகிப் போனதுதான் மிச்சம். அதனால் பிரைட் நடிகர் ஜென் நிலைக்குச் சென்று, இப்போது எல்லாம் ரொம்பவே அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்படி இருக்கையில் பிரைட் நடிகரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அவரது திரை வாழ்க்கையில் சுமார் 10 ஆண்டு கால தோல்வி வனவாசத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், படத்தின் இயக்குநரான குரல் வித்தை இயக்குநரோ படத்தின் முதல் காட்சி முடிந்ததில் இருந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார்.

மிதப்பில் இயக்குநர்: இது மட்டும் இல்லாமல், இப்ப நான் தான் டா இந்த கோலிவுட்டோட டாப்புல இருக்கேன் எனக்கு கீழ தான் எல்லாமே என்ற மமதையில் ஓவர் ஆட்டம் போடுகிறார் என்ற பேச்சும் ஒரு புறம் போய்க்கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை நெட்டிசன்களும் நடிகர் மற்றும் இயக்குநர் மீது வஞ்சக அன்போடு இருப்பவர்களும் போஸ்ட்மார்டம் செய்வது போல, இந்த காட்சி அங்கிருந்து சுட்டது, அந்த காட்சி அங்கிருந்து சுட்டது, இந்த காட்சியில் அரசியல் தெளிவே இல்லாமல் இருக்கிறது என்றும் காட்டமாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.
கடுப்பில் இயக்குநர்: பிரைட் நடிகரின் ரசிகர்களோ தங்களது அபிமான நடிகருக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் இணையத்தில் வரும் இந்த காப்பி கட் காட்சிகளை பார்த்த பின்னர், இப்படி ஒரு சக்சஸ் நம்ம அபிமான நடிகருக்கு தேவையா? இதுக்கு தோல்விப்படமே கொடுத்துட்டு போயிருக்கலாம் என்று பேசி வருகிறார்களாம். ரசிகர்களின் இந்த மனநிலையில் தான் நடிகரும் அவரது சகாக்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications