பவர் நடிகரை பகைத்துக் கொண்ட ஹைட் நடிகர்.. ஊரே கூடி கும்மி அடிச்சுட்டாங்க.. காப்பாற்றிய பெரிய மனுஷன்

By Staff

சென்னை: ஆக்‌ஷன் ஹீரோ, பாக்ஸ் ஆபீஸில் வசூல் மன்னன், ரீ ரிலீஸிலும் தியேட்டர் ஓனர்களுக்கு விடிவெள்ளி என சினிமா கெரியரில் அதிரடி காட்டிக் கொண்டு இருந்த நடிகர் என்ன நினைத்தாரோ ஏதோ நினைத்தாரோ, திடீரென அவரது தொழிலை மொத்தமாக மாற்றிக் கொண்டார். நடிகர் இப்படிச் செய்யும் போது பலரும் அவரைக் கிண்டல் செய்தனர். அதுவும் குறிப்பாக, தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று வியாக்கியானம் பேசினார்கள்.

ஆனால் நடிகரோ, நான் கெட்டாலும் எனது ரசிகர்கள் எனக்கு துணை இருக்கிறார்கள் என்று நம்பிக்கையுடன் புதுத் தொழிலை தொடங்கினார். அப்படி இருக்கும்போது அந்த தொழிலில் நடிகர் இப்போது பவர்ஃபுல்லான இடத்திற்கு சென்று விட்டாராம்.

Kollywood Buzz Height Actor Reportedly Seeks Peace After Clashing With Powerful Star and Facing Massive Backlash

ஹைட் நடிகருக்கு கும்மி: நடிகர் கண் இமைத்தால் சொல்வதைக் கேட்க லட்சக்கணக்கில் ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நடிகர் அடிப்படையில் ரொம்பவே அமைதியான மனிதர் என்பதால் நடிகர் தனது பவர்ஃபுல்லான இடத்தில் இருந்து கொண்டு, ஒவ்வொரு முடிவையும் பார்த்து பார்த்து நிதானமாக எடுத்து வருகிறார். அப்படி இருக்கையில் நடிகர் எடுத்த முடிவு ஒன்று குறித்து ஹைட் நடிகர் தேவையில்லாமல் கருத்துச் சொல்ல, நடிகரின் ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையில் இருக்கும் பலரும் அந்த ஹைட் நடிகரைப் போட்டு ரவுண்டு கட்டி, கும்மி அடித்து விட்டார்கள்.

பீதியில் நடிகர்: ஹைட் நடிகரோ, என்னடா எங்கு திரும்பினாலும் அணை கட்டுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல், இருந்தபோது, மூத்த நடிகர் ஒருவர் மூலம் அந்த பவர் நடிகருக்கு தூது அனுப்பி, மன்னிப்பு கேட்டு, பிரச்னை இப்போது சுமூகமாக முடிந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனாலும் இந்த ஹைட் நடிகரோ தனது படம் வெளியாகும் போது இந்த பவர் நடிகரின் ரசிகர்கள் என்னவெல்லாம் சொல்லப் போகிறார்களோ என்று குழப்பத்தில் இருக்கிறாராம். இது மட்டும் இல்லாமல் பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டு விடலாமா என்றும் யோசித்து வருகிறாராம். மொத்ததில் ஹைட் நடிகர் செம்ம பீதியில் இருக்கிறார் என்ற பேச்சு மட்டும் திரைத்துறையில் ஓடிக் கொண்டி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X