நம்பர் நடிகை மட்டுமில்லை.. வெளிச்ச நடிகையும் லிஸ்ட்டில்.. விரைவில் நடிகரின் பெட் ரூம் சீக்ரெட் வருதாம்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரான மாஸ் நடிகர்; இப்போது புதிய பயணத்தில் இருக்கிறார். அந்தப் பயணத்தில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. முக்கியமாக நம்பர் நடிகையின் விவகாரம்தான் அவரது தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியாக பயமுறுத்துகிறது. இந்நிலையில் நம்பர் நடிகை மட்டுமில்லை மாஸ் நடிகரின் லிஸ்ட்டில் வெளிச்ச நடிகையும் இருக்கிறார். விரைவில் சீக்ரெட் எல்லாம் வரும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் அவர். அவரை அவரது ரசிகர்கள் பக்கா மாஸ் நடிகர் என்றெல்லாம் சொல்லி கொண்டாடுவார்கள். நடிகரின் சில படங்களும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான படங்கள் அவ்வளவு வசூல் எடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் மார்க்கெட்டில் தான் எப்போதுமே டாப்பில் இருக்க வேண்டும் என ஆசைப்படும் அவர்; போலி நம்பர்களை சொல்லி மார்க்கெட்டை ஆட வைப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

Kollywood Buzz Leading Tamil Hero Linked With Two Actresses Industry Talks Grow
Photo Credit:

நடிகரின் புதிய பயணம்: நீண்ட வருடங்களாகவே ஒரு புதிய பயணத்துக்கு பிளான் செய்துகொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்புதான் அந்தப் பயணத்தை தொடங்கவும் செய்தார். பயணத்தை ஆரம்பித்ததுமே; அந்த ரூட்டில் பாரம்பரியமாக இருக்கும் சிலரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் நடிகரின் வீட்டிலிருந்தே அவருக்கு எதிராக ஆயுதம் தூக்கப்பட்டது. அந்த ஆயுதத்தை அவரும், அவருடன் இருந்தவர்களும் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் சமாளித்துதானே ஆக வேண்டும் என முடிவு செய்து களத்திலும் குதித்தார்கள்.

Also Read
நம்பர் நடிகைக்கு போன் போட்ட எக்ஸ் லவ்வர்.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டன்னு பொறாமை வேற!
நம்பர் நடிகைக்கு போன் போட்ட எக்ஸ் லவ்வர்.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டன்னு பொறாமை வேற!

நடிகர் செய்த சேட்டை: இந்த விஷயத்தில் நடிகரை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என நைட் ஷிஃப்ட் எல்லாம் போட்டு வேலை செய்தார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால் நீங்கள் கட்டடத்தை கட்டுங்கள் நான் இடித்துவிடுகிறேன் என்கிற மாதிரி; நடிகை ஒருவருடன் பொதுவெளிக்கு அவர் வந்தது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அனைவருமே அவருக்கு எதிராக தங்களது கருத்தினை பதிவு செய்தார்கள். இதெல்லாம் தேவைதானா என்று நொந்துபோய்; கொடுத்த முட்டெல்லாம் வீணாகிவிட்டதே என மூலையில் அமர்ந்து அழுகாத குறைதான்.

வெளியாகும் சீக்ரெட்?: இந்நிலையில் நடிகர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று வட்டமடிக்கிறது. அதாவது நம்பர் நடிகை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் நடிகருடன் அனைத்தையும் ஷேர் செய்கிறாராம். ஆனால் அவருக்கும் முன்னதாகவே வெளிச்ச நடிகை அந்த இடத்தில் இருந்தாராம். இரண்டு பேரும் அடிக்காத கூத்துக்களே இல்லையாம். ஒருகட்டத்தில் நடிகையின் வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட்டதால்; வெளிச்சத்தை கழற்றிவிட்டுவிட்டு நம்பரை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டாராம்.

ஆனால் நடிகருக்கு எதிராக ஆயுதத்தை தூக்கியிருப்பவர்; வெளிச்ச நடிகையுடன் நடிகர் அடித்த கூத்து தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி வைத்திருக்கிறாராம். இந்த விஷயத்தில் தான் சொல்லும் டீலுக்கு நடிகர் ஓகே சொன்னால் அதை வெளியே விட வேண்டாம்; அதை தவிர்த்து நடிகர் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும்; பெட் ரூம் சீக்ரெட்டை வெளியே போட்டு உடைத்து; இமேஜை டோட்டலாகவே காலி செய்ய முழு வீச்சில் வேலைகள் நடந்துவருகின்றனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X