மனைவியிடம் கெஞ்சிய மாஸ் நடிகர்?.. நடிகையின் மடியிலேயே கிடங்க என்ற மகன்.. அசிங்கப்படுத்திட்டாராம்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அவர். கோடி கணக்கில் சம்பளம், ஏகப்பட்ட சொத்துக்கள், புகழ் என டாப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவருக்கு; பெர்சனல் வாழ்க்கையில் ஒரு பிரச்னை வந்திருக்கிறது. அவரது மனைவியே தனது கணவருக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டார். முதலில் ரொம்பவே தெம்பாகத்தான் இருந்தாராம் நடிகர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இமேஜ் எல்லாம் டேமேஜ் ஆவதால் என்ன செய்வதென்று தெரியாமல்; மனைவியிடம் சமாதான புறாவை பறக்கவிட்டாராம்.

மாஸ் நடிகர் என கொண்டாடப்படும் அவர்; சினிமாவில் அறிமுகமானபோது ஏகப்பட்ட கிண்டல்கள், விமர்சனங்களை எல்லாம் சந்தித்தார். ஆனால் தன் மீது விழுந்த கற்களை படி கற்களாக மாற்றி சரசரவென்று திரைத்துறையில் முன்னேறினார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒருகட்டத்தில் கோடி கணக்கில் வசூல் செய்ய ஆரம்பித்தன. அதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் பிரபல்யத்தோடு இருந்த அவர்; இந்திய அளவிலும் டாப் நடிகர்களில் ஒருவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credit:

மனைவிக்கு கொடுத்த டார்ச்சர்: நல்லபடியாக சினிமாவில் பீக்கில் இருந்தார். அப்போதுதான் பல வருடங்களுக்கு பிறகு அந்த நடிகையுடன் சேர்ந்து நடித்தார். இரண்டு பேருக்கும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னரே கிசுகிசு ஓடியது. அதையெல்லாம் தவிர்த்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றினார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்குள் அணைந்திருந்த பழைய தீ; மீண்டும் எரிய தொடங்க; மனைவியின் வயிற்றெரிச்சலை சம்பாத்த்துக்கொண்டார் நடிகர்.

மனைவி கொடுத்த சிக்கல்: ரொம்பவே பொறுமையாக இருந்த நடிகரின் மனைவி; ஒருகட்டத்தில் பொறுமையிழந்து நடிகரின் லீலைகளை எல்லாம் பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார். நடிகர் புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில்; இப்படி ஒரு ட்விஸ்ட்டை மனைவி கொடுத்துவிட்டாரே என அனைவருக்குமே ஷாக். ஆனால் நடிகர் கொஞ்சம் தெம்பாகத்தான் இருந்தார். இவ்விஷயம் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என ஓவர் கான்ஃபிடன்ஸில்தான் இருந்தார்.

Also Read
நம்பர் நடிகை மட்டுமில்லை.. வெளிச்ச நடிகையும் லிஸ்ட்டில்.. விரைவில் நடிகரின் பெட் ரூம் சீக்ரெட் வருதாம்
நம்பர் நடிகை மட்டுமில்லை.. வெளிச்ச நடிகையும் லிஸ்ட்டில்.. விரைவில் நடிகரின் பெட் ரூம் சீக்ரெட் வருதாம்

டேமேஜ் ஆன இமேஜ்: ஆனால் நடிகர் நினைத்ததைவிட நிலைமை விபரீதிமாகிவிட்டது. கட்டிய மனைவியையே இப்படி டார்ச்சர் செய்திருக்கிறாரே என பெண்கள் மத்தியில் குரல்கள் கேட்கின்றன. முக்கியமாக, பெண்கள் மத்தியில் அவருக்கு இருந்த இமேஜ் ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது. இந்நிலையில் நடிகர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று பரவியிருக்கிறது. அதாவது, தனது இமேஜை காப்பாற்ற வேண்டுமென்றால் மனைவியுடன் சுமூகமாக போவதுதான் ஒரே வழி என முடிவெடுத்து; மனைவிக்கு தூது புறா அனுப்பினாராம்.

கடுப்பான மகன்: அதுமட்டுமின்றி சில முறை ஃபோன் செய்தும் பார்த்தாராம். முதலில் யாரிடமும் சொல்லாமல் அவாய்ட் செய்துகொண்டிருந்த ஒரு மனைவி; இதற்கு மேலும் இவர் கெஞ்சல் நாடகத்தை வளர விடக்கூடாது என முடிவெடுத்து; தனது மகனிடம் சொல்லியிருக்கிறார். உடனே தன்னுடைய அப்பாவான நடிகருக்கு ஃபோனை போட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேச வருகிறீர்கள். அந்த நடிகையின் மடியிலேயே கிடக்க வேண்டியதுதானே.. இனிமேல் எந்த ஃபோனும் வரக்கூடாது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லி துண்டித்துவிட்டாராம். அதனை எதிர்பார்க்காத நடிகரோ, 'என் வீட்டு கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதே' என சரக்கை போட்டுவிட்டு புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X