இத்தனை வயதிலும் அந்த ஆசை போகவில்லையா?.. நடிகையை கவிழ்க்க பிளான் செய்த நடிகர்?.. அம்மணி உஷார்

By Staff

சென்னை: சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழ்பவர் அந்த நடிகர். இந்தியா முழுவதும் அவர் மீது பலரும் பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். இப்போதும் டாப் ஹீரோக்களில் ஒருவராகத்தான் அவர் ஜொலித்துவருகிறார். நடிப்பு மட்டுமின்றி சினிமாவின் இதர துறைகளிலும் கவனம் செலுத்தும் அவர்; உச்ச நடிகரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அதில் நடக்கும் விஷயம் குறித்து கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.

கோலிவுட்டை சேர்ந்த அந்த முன்றெழுத்து நடிகர்; மூன்று தலைமுறைகளின் ஃபேவரைட்டாக இருக்கிறார். இப்போது அவருக்கு வயது ஆகிவிட்டாலும்; அசராமல் சினிமாவிலேயே இயங்கிவருகிறார். அதை பார்த்து அனைவருமே ஆச்சரியம்தான் படுகிறார்கள். இடையில் கொஞ்சம் வேறு ரூட்டுக்கு சென்ற அவர்; அது சரிபட்டு வராததால் மீண்டும் சினிமாவுக்கே வந்துவிட்டார்.

Kollywood Buzz Top Producer-Actor Reportedly Warned by Former Flame on Big-Budget Film Set
Photo Credit:

இந்த முறை வேறு மாதிரி: இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிகின்றன. முன்பெல்லாம் பெரும்பாலும் மற்ற ஹீரோக்களை வைத்து தன் கம்பெனி மூலம் படங்களை தயாரிக்கமாட்டார். ஆனால் இப்போது அப்படியில்லை. பெரும்பாலும் அவரது தயாரிப்பில் மற்ற ஹீரோக்கள்தான் நடிக்கிறார்கள். உச்ச நடிகர் முதல் இளம் நடிகர் வரை அவரது கம்பெனிக்கு படம் செய்ய ஆசைப்படுகிறார்கள். அவர் தயாரிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது.

Also Read
நடிகருக்கு பக்கா பிளான் போட்டுக் கொடுக்கும் நடிகை.. எதுவும் நல்லதுக்கு இல்லையாம்
நடிகருக்கு பக்கா பிளான் போட்டுக் கொடுக்கும் நடிகை.. எதுவும் நல்லதுக்கு இல்லையாம்

உச்ச நடிகருடன்: இப்போது அந்த நடிகர் உச்ச நடிகர் ஒருவரை வைத்து படம் தயாரிக்கிறார். படத்தை நெருப்பு கக்கும் விலங்கின பெயரில் படம் எடுத்தவர் இயக்குகிறார். இந்த இயக்குநருக்கு முன்னதாக பலரும் கமிட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக இவரை ஃபிக்ஸ் செய்த நடிகர்; பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும்; செலவை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

நடிகை உள்ளே: இந்தப் படத்தில் நான்கு எழுத்து நடிகையும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்த் நடிகைக்கும், படத்தை தயாரிக்கும் நடிகருக்கும் இடையே ஏற்கனவே ஒரு உறவு இருந்தது. திருமணம் வரை அவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்; நடிகரின் பாலிஸி நடிகைக்கு ஒத்து வராததால் அந்த உறவு பாதியில் முடிந்துவிட்டது. பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் அம்மணி.

ஆசையில் நடிகர்: நடிகரும் அந்த நடிகையிடமிருந்து பிரிந்து வேறு வேறு கமிட்மென்ட்டுக்குள் எல்லாம் சென்று வந்துவிட்டார். இருந்தாலும் அந்த நடிகையுடனான வசந்த கால நினைவுகள் மட்டும் அகலவில்லையாம். இப்போது அந்தப் படத்தில் நடிகையும் நடிக்கவிருப்பதால்; மீண்டும் நடிகையுடன் பேட்ச் அப் செய்து சிறிது காலம் உறவில் இருக்கலாம் என்ற மைண்ட் செட்டில் இருந்தாராம். ஆனால் நடிகையோ உஷாராகி, 'இதோ பாருங்கள் பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி மூச்சுக்கூட விடக்கூடாது. அப்படி விட்டால் நான் படத்திலிருந்து வெளியேறிவிடுவேன்' என கண்டிஷன் போட்டுத்தான் நடிக்கவே ஒத்துக்கொண்டாராம். இதனால் நடிகர் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.

Read more about: gossip kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X