சிக்கிக் கொண்ட சில்மிஷ இசையமைப்பாளர்.. எலெக்‌ஷன் நேரத்தில் உதவ முடியாது கைவிரித்த அரசியல் புள்ளி

By Staff

சென்னை: நல்லா பாட்டு பாடுவாரு, நல்லா ஹம் பண்ணுவாரு, நல்லா மியூசிக் போடுவார், பின்னணி இசையில் கெட்டிக்காரர் என தென்னிந்திய திரையுலகமே கொண்டும் அளவுக்கு உயர்ந்த அந்த இசையமைப்பாளர் தற்போது பாடகியிடம் அத்துமீறிய விவகாரத்தில் சிக்கிக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

அதுவும் இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பாடகியிடம் அத்துமீறியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் இசையமைப்பாளரோ தனக்குத் தெரிந்த அரசியல் புள்ளிகளிடம் எல்லாம் சென்று தன்னைக் காப்பற்றும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறாராம். அதாவது, பாடகியிடம் அத்து மீதியது தொடர்பாக அவரிடத்தில் ஆதாரம் இருக்கிறது என பேட்டியில் தெரிவித்த பின்னர் தான் ஓவர் டரியலில் சுற்றி வருகிறாராம் இசையமைப்பாளர்.

அவரைக் காப்பாற்றும் படி எல்லா முயற்சிகளையும் அவர் எடுத்தாலும், எந்த அரசியல் புள்ளியும் அவரைக் காப்பாற்ற இசைவு தெரிவிக்கவில்லையாம். அதுவும் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நேரத்தில் இப்படி வந்து உதவி கேட்டு, அதற்கு நாங்கள் உதவி, அது அரசல் புரசலாக வெளியே தெரிந்தாலும் பெரும் அவமானமாகிவிடும். அதனால் இந்த பிரச்னையில் எந்த உதவியும் செய்ய முடியாது என அரசியல் புள்ளிகள் பலரும் கை விரித்து விட்டார்களாம்.

Kollywood Composer in Trouble Over Alleged Misconduct Case Political Support Denied Amid Election Heat
Photo Credit:

இசையமைப்பாளர் முயற்சி: அதே நேரத்தில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தான் பணியாற்றிய தெலுங்கு பட தயாரிப்பாளரிடம் கேட்கலாமா என்றும் அவர் முயற்சித்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. மொத்தத்தில் இந்த இசையமைப்பாளர் இந்த விவகாரம் தொடர்பான புகைச்சல்கள் அடங்கும் வரை புதிய படங்களில் எதிலும் கமிட் ஆக வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

திரைத்துறையில் சப்போர்ட்: இப்படியான நிலையில் திரைத்துறையில் இருந்து பலருமே பாடகிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். அதுவும் சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாகவும் உதவ முன் வந்துள்ளார்களாம். அதுவும் ஒரு மூத்த பாடகி எல்லாம், இசையமைப்பாளரின் பெயரை மட்டும் வெளியே சொல், அந்த இசையமைப்பாளரை நார் நாராக கிழித்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம். திரைத்துறையில் இருந்து பாடகிக்கு ஆதரவு பெருகி வருவதால் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் சில வாரங்களுக்குள் அந்த இசையமைப்பாளர் பெயரைச் சொல்லி விடலாம் என்று முடிவு செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X